Mar 23, 2010

டாக்டர் அப்துல்கலாமின் இளைஞர்கள் காலம்.








...என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள். என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை.

2020 -ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்....

.....என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65 - 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். "கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்துவிட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது''.. .....

.....தீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த ஜவான்களுக்கான அஞ்சலியாக அமர்ஜோதி ஜவானில் நான் படித்த கவிதை.

எங்கள் இதயத்தில் உங்களின் வீரத்தினால் விளக்கேற்றுங்கள்

அதன் கனல் தேசமெங்கும் பரவட்டும்

உங்கள் தியாகத்தின் செய்தி நாடெங்கும் செல்லட்டும்

அது எமது நம்பிக்கையை மேலும் தெம்பூட்டும்.......

படிக்க படிக்க நமது மனதில் உத்வேகமும் உற்சாகமும் பற்றிக்கொள்கிறது,

ஐயா!

நீவீர் இந்நாட்டில்

இறக்காத வரம் வேண்டும்,

இறந்தாலும், இம்மண்ணில்

விருட்சத்தின் விதைகளாய்

வீதியெங்கும் விழவேண்டும்....

தெருவெங்கும் அறிவு விளக்கை ஏற்றிச் செல்லும் ஒரு தலைவனுடன் பயணம் செய்ய நக்கீரனில் வந்த தொடர்; ஒரு மென்புத்தகமாக நமது வலைப்பூவில்.

புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றி.


Click to download.

2 comments:

  1. தோழா, இன்னும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகளை அப்லோட் செய்யலாம். க.நா.சு. அவர்களின் படைப்பகள், சுந்தர ராமசாமி, கவிஞர் விக்ரமாதித்யன், பிரமிள்,புதுமைப் பித்தன்,ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ஜே.கிருஷ்ணமூர்த்தி,கி.ரா.,சி.சு.செல்லப்பா,பாரதியார்,பாரதிதாசன்,கண்ணதாசன்,வண்ணநிலவன்,வண்ணதாசன்,தி.ஜானகிராமன்.....
    இவர்களின் படைப்புக்களையும் ஏற்றலாம்.
    அயல்நாட்டு இலக்கியப்படைப்புக்களையும் தயை கூர்ந்து ஏற்றவும்.
    டால்ஸ்டாய்,காரக்கி,காஃப்கா,ஹெமிங்வே,செகாவ்,தஸ்த்தாயெவ்ஸ்கி,டிக்கன்ஸ்,பாப்லோ நெர்தா,ஷேக்ஸ்பியர்,.......

    ReplyDelete
  2. please upload Dr.irrai anbu ias books...

    ReplyDelete