தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 17, 2018

இலவச மின்னூல் தரவிறக்கம்

அன்புடைய நண்பர்களுக்கு,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் இல்லாமல் இருப்பதை நண்பர்கள் அறிவார்கள். இங்குள்ள இணைப்புக்களும் (links) வேலை செய்யவில்லை.

சில காரணங்களுக்காகவே புதிய பதிவுகளும் இடவில்லை மேலும் இணைப்புகளை சரிசெய்யவும் இல்லை. 

இணையதளம் பரவலாக அறியப்பட்ட போது இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களை PDF பக்கங்களாக இங்கு மக்களுக்கு தருவதற்காக இந்த தளம் தொடங்கப்பட்டு அதிகமான புத்தகங்கள் எங்களால் முடிந்த அளவு கொடுத்தோம். சில நேரங்களில் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அந்த குறிப்பிட்ட பதிவை நீக்கியதும் உண்டு.  எனினும் ஒரு குற்றவுணர்வு இருந்துகொண்டே இருந்தது. 

சமுகத்தில் எழுத்தாளர்களின் பங்கு என்பது மிக அரிதானதும், முக்கியமானதும் என்று நினைக்கிறோம். அவர்களின் எளிய வாழ்க்கை நிலையையும் கருத்தில் கொண்டோமென்றால் இப்படி அவர்களின் புத்தகங்களை எடுத்து இணையத்தில் இலவசமாக கொடுப்பது முற்றிலும் தவறானது என்று உணர்ந்துகொண்டதால் பதிவிடுவதை நிறுத்திக்கொண்டோம்.

சமீபத்தில் திரு ஜெயமோகன் அவர்களின் இந்த பதிவை பார்க்க கிடைத்தது. அவரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

https://www.jeyamohan.in/112357#.W599NlQzbcs

முன்பே இத்தகைய காரணங்களால் பதிவிடுவதை நிருத்திவைத் திருந்தாலும் இன்று முழுவதும் உணர்ந்து, சில காலங்களில் இந்த இணையதளத்தையே முழுவதும் நீக்கிவிடலாம் என்று எண்ணியிருக்கிறோம். 

இதனால் மக்களுக்கு பெரிய பாதிப்பிருக்காது என்ற எண்ணத்தோடு, அவ்வாறு பாதிப்பிருந்தாலும் அதற்கான முழுமையான வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு உங்களிடமிருந்து விடை கொள்கிறோம்.

என்னோடு பல புத்தகங்கள் சேர்ந்து பதிவிட்ட Sri அவர்களின் முழுமையான உடன்பாடுடன் இத்த முடிவு எடுக்கப்பட்டது.

திரு, ஜெகதீசன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் மிக்க நன்றிகளும் வணக்கங்களும்.

மிக்க நன்றி.

உங்களின் கருத்துக்களை பின்னுட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வணக்கங்களுடன்,
சி. பழனிவேல்.

முக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts