ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் என்போன்றவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் கிடைத்து விடுவதில்லை. வலையில் தேடியபோது கொஞ்சம் கிடைத்தது. அதை அப்படியே எல்லோருக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி பதிய ஆரம்பித்து இப்போது 100 வது பதிவை எட்டி சதம் அடித்து விட்டது.
இந்த நேரத்தில் சிலபேருக்கு நன்றி சொல்லுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
இணையத்தில் என்போன்றோர் எளிதாக பதிவிட்டாலும், யாரோ ஒருவர் அந்த மென்புத்தகங்களை மிகக் கவனமாக தேடி எடுத்து அல்லது ஒவ்வொரு பக்கங்களாக ஸ்கேன் செய்து அதன் பின்புலத்தில் மிககடினமாக தங்களது உழைப்பை செலவிட்டிருக்கவேண்டும். எனவே அந்த முகம் தெரியாத தங்கத் தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.
திரு. அருள்ராஜ் அவர்களின் booksforpeople.blogspot.com. இந்த தளத்தில்தான் தமிழில் மென்புத்தகங்கள் இருப்பதை முதன்முதலில் அறிந்தேன். அதன் பிறகு திரு. pkp.in மற்றும் சில தளங்கள். இவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இவர்களில் திரு அருள்ராஜ் இப்போது பதிவதை நிறுத்திவிட்டார் என்று நினைக்கிறேன்.
முதலில் அதிகமான நேரம் இணையத்தில் உலவ முடிந்தது. இப்போது வேலைப்பளு மற்றும் வேறுசில காரணங்களால் முன்புபோல இணையத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை எனவே முன்புபோல அடிக்கடி பதிவிட இயலவில்லை.
சில நண்பர்கள் இந்த பதிவின் முலம் கிடைத்துள்ளார்கள். நண்பர் திரு. அவர்கள் மாயவலை புத்தகத்தை படித்து அதன் மீதி பக்கங்களை கண்டறிந்து அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்துள்ளார் (இப்போது முழு புத்தகத்தையும் மறுபடி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்). மற்றும் சில நண்பர்களும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்வது உண்டு. அவர்களுக்கும் மற்றும் இந்த தளத்தை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
திருமதி. ரமணிச்சந்திரன் அவர்களுக்கு, உங்களின் எழுத்துக்களின் மீது தீராத ஆசை கொண்ட ரசிகர்களின் வேண்டுகோள்.
இந்த தளத்திற்கு அதிகமானவர்கள், திருமதி.ரமணிச்சந்திரன் நாவல்களை தேடித்தான் வருகிறார்கள். ஆனால் ziddu விலிருந்து அணைத்து நாவல்களும் delete செய்யப்பட்டு விட்டது. இது புத்தகங்களின் உரிமையாளர் அல்லது பதிப்பகத்தின் முயற்சியாகத்தான் இருக்கும்.
கண்டிப்பாக அவர்களின் பார்வையில் இது சரியான செயலாகத்தான் இருக்கமுடியும். அதேநேரத்தில் அவர்களுக்கு புத்தகப் பிரியர்களான எங்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்.
நாங்கள் உங்களின் தீவிரமான ரசிகர்கள், மற்றும் வெளியூர்/வெளிநாட்டில் குடியிருப்பவர்கள். நாங்கள் ஊரில் இருக்கும்போது உங்களின் ரசிகர்களாக இருந்து உங்களின் புத்தகங்களை தவறாமல் கடைகளில் வாங்கி படித்தவர்கள்.
இப்போது பிழைப்புக்காக வெளியூர்களுக்கு வந்தும், உங்களின் புத்தகங்களின் மீதும், எழுத்துக்கள் மீது தீராத ஆசை கொண்டிருப்பவர்கள்.
நமது ஊர்களைப்போல் வெளியூர்களில், வெளிநாடுகளில் உங்களது புத்தகங்கள் கிடைப்பது கிடையாது. அதனால்தான் எங்களைப்போன்றோர் மென்புத்தகங்களைத் தேடுகின்றோம்.
படிப்பதற்கு அசெளகரியமாக இருந்தாலும் உங்கள் எழுத்துக்களின் மீதுள்ள மோகம், எங்களை மென்புத்தகங்களாகவேனும் படிக்க தூண்டுகிறது. இதன்மூலம் எந்தவிதத்திலும் தமிழ்நாட்டில் தங்களது புத்தகங்களின் விற்பனை குறையாது. மேலும் நம்நாட்டில் பொதுவாக யாரும் மென்புத்தகங்கள் படிப்பதும் கிடையாது.
இதுபோன்று மென்புத்தகங்களை படிக்கும்போது அதன்மீது ஆசை கொண்டு நமது நாட்டுக்கு வந்து அதனை புத்தகமாக வாங்கவே விரும்புகிறோம். எனவே மென்புத்தகங்களை படிக்கும் எங்களை தவறாக எண்ணவேண்டாம். இதுபற்றிய திரு. pkp அவர்களின் பதிவு http://pkp.blogspot.com/2008/03/blog-post_25.html
WINNERS DON'T DO DIFFERENT THINGS, THEY DO THINGS DIFFENTLY.
பொதுவாக ஆங்கில புத்தகங்கள் படிப்பது கிடையாது ( அந்த அளவிற்கு சரக்கு இல்லேங்கோ). ஆனால் இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது என்று கேள்விப்பட்டு வாங்கி புரட்டினேன்.
மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கும் ஆங்கிலம் முதலில் என்னைக் கவர்ந்தது. பின்பு தான் சொல்லவந்ததை ஒரு கதைமூலம் விளக்குவது மற்றும் ஏதேதோ செய்து புத்தகத்தை படிக்கவைத்து ஒரு புயலையே ஏற்படுத்திவிட்டார். உதாரணத்துக்கு ஒன்று
A boy was flying a kite with his father and asked him what kept the kite up. Dad replied,"The string." The boy said, "Dad, it is the string that is holding the kite down." The fatherasked his son to watch as he broke the string.
Guess what happened to the kite? It came down. Isn't that true in life? Sometimes the very things that we think are holding us down are the things that are helping us fly. That is what discipline is all about.
இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தால் தாருங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.
Click to download.
எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம்!.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பதுங்கியிருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டால்தான் அதைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
மனோதத்துவ மேதை சிக்மன்ட் ஃப்ராய்டு எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வன்முறை உணர்வுகள் இருக்கிறது. எப்படிப்பட்ட மோசமான குற்றத்தையும் செய்யத் தூண்டும் வெறி உணர்வு அவனுடைய ஆழ்மனதில் தங்கியிருக்கிறது. ஓரளவுக்கு அதைக் கட்டுப்படுத்துவது சமூகக் கட்டுப்பாடும் சமுதாய சட்டதிட்டங்களும், பின்விளைவுகளும், குற்ற உணர்வும்தான்! என்கிறார்.
மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல... கேட்டவர்களும் அல்ல! வெளியே மனிதன், உள்ளே மிருகம் -இரண்டும் சேர்ந்த கலவைதான் நாம்!
இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜீ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது. தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவெ கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் பொவதோ கடலில். ஆரம்பம் முடிவில்லாத பெருங்கடல். -மதன்.
Click to download.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது.
உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்
மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம்.
அப்புறம் சந்திக்கலாம் அதுவரைக்கும் எல்லோரும் வந்து பார்க்கிறதுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட மறந்துராதிங்க.
நன்றி நண்பரே
ReplyDeleteஇது ஒரு பெட்டகம் எனக்கு...வாழ்த்துக்கள்!...பூங்கொத்து!
ReplyDeleteபிரியமுடன்
ReplyDeleteநன்றி நண்பரே
ஸ்ரீ
உங்கள் அன்புக்கு நன்றி அருணா அவர்களே.அடிக்கடி வருகை தாருங்கள்.
ReplyDeleteஸ்ரீ
பாராட்டுகள் நண்பரே!
ReplyDeleteஉங்க சேவைக்கு என் வாழ்த்துகள்.
தொடருங்கள்.
- பரஞ்சோதி
வந்ததற்கும் வாழ்த்தியதற்கும் நன்றி பரஞ்சோதி சார்.
ReplyDeleteHello friend you doing good job but the PDF files i downloaded was not opening please check it
ReplyDeleteWhich one not opening, Please specify Sathish.
ReplyDeleteContinue your food work. All the best
ReplyDelete//blogpaandi said...
ReplyDeleteContinue your food work. All the best//
Thank you very much for your visit and comment Paandi..
நன்றி நண்பா தங்தள் தேடல் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete///Evergreen said...
ReplyDeleteநன்றி நண்பா தங்தள் தேடல் தொடர வாழ்த்துக்கள்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Evergreen.
வணக்கம், தங்களது பிளாக்கை Feedburner and Tamilish ல் இனணத்தால், உங்கள் புதிய பதிவுகளை தெரிந்துக்கொள்ள மிகவும் வசதியாய் இருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி
ReplyDeleteஇரா. இராஜேஸ்வரன்
rajsteadfast@gmail.com
///Rajesh said...
ReplyDeleteவணக்கம், தங்களது பிளாக்கை Feedburner and Tamilish ல் இனணத்தால், உங்கள் புதிய பதிவுகளை தெரிந்துக்கொள்ள மிகவும் வசதியாய் இருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி////
என்னுடைய ஒவ்வொரு பதிவையும் tamilish ல் இணைக்கிறேன். மற்றும் feedburner ல் இணைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இதுபற்றிய மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியவில்லை ராஜேஷ் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
///Bogy.in said...
ReplyDeleteபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.////
அப்படியே செய்துவிடுகிறேன் நண்பரே
This is the first time i am visiting this blog.Even though i had seen many ebooks i didn't find any friends to discuss about the tamil books I am very happy and the next time i will try to write in tamil in this place. I don't know how to write tamil here. Thank you for the job done. I am also having an idea to scan the serials that had been collected by me from kumudam kalkandu Kalki etc in those days in 1965 to 1973 with illustrations of vinu maniam maniamselvam. I will definitely do it
ReplyDeletei heartly thank for your gratefull service to our society
ReplyDeletegreat work.. keep it up
ReplyDeleteதங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசித்த மருத்துவ நூல்களை எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இலவசமாக நூல்களைப் பெற இங்கே செல்லவும்.
Very very thanks sir..
ReplyDeleteromba payanulladha iruku unga site..
Suresh
PLEASE POST JOTHIDAM E-BOOKS
ReplyDeleteGood Effort...really it is very useful...congrats and keep it up...I am expecting Thi.Janakiraman books in this blogspot....R.Shiva...Erode
ReplyDeleteNice books. I like all of them. "You can win" is a must book to read. "Manidhanukulaye oru mirugam" is also one of my most favorites. thanks for sharing. Keep posting.
ReplyDeleteIts a nice work. I am in Iran, find a tamil book in
ReplyDeletenet is very useful.
Thanks for your effort.
T.Selvarajan
This comment has been removed by the author.
ReplyDeleteThere is one more Treasue in
ReplyDeletehttp://archive.org/details/openreadingroom
Wich has 1911 Tamil Books.
If you are interested in English Books the followoing links may be useful:
Project Gutenberg and
http://archive.org/
Well it's a great site to get tamil books easily. Largest collection of english ebooks you can check here Ebooks Free Download or you can check here Free Books You must check once. You will be fond of this site
ReplyDeleteAll Bangla Choti – বাংলা চটি সমগ্র
ReplyDeleteনষ্ট মেয়ের উপাখ্যান – প্রথম পর্ব Bangla choti list !
সিনিয়র আপু যখন বউ Bangla Choti
Desi Choti Stories
ভাবির ঘুম আসেনা তাই,দেবরের ঘরে অতঃপর দেখুন
All Bangla Movie