தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jan 28, 2009

பானுமதி ரமணிச்சந்திரன்
தினம் 40 வரை இருந்த எங்கள் இந்த blog-இன் வருகைப் பதிவை ஒரே நாளில் 500 ஐ எட்டசெய்தது மட்டும் அல்லாது , 17 vote அளித்து பெரும்பாலான தமிழ் நெஞ்சங்களை எங்களுக்கு அறிமுகம் செய்த http://www.thamilish.com/ க்கு நன்றி.

பானுமதி
திருமதி. ரமணிசந்திரன் எனக்குப் பிடிக்கும்.. பிரச்சனைகளை எதிர்த்து நிற்கும் அதே சமயத்தில் புரட்சிப் பெண் என்று கொடி பிடிக்காத பெண் கதாநாயகிகள்.. ஒரு மாதிரி டெம்ப்லேட் கதைகள் தான்.. ஆனாலும் கொஞ்சம் வருத்தமான நேரங்களில் படித்தால் உற்சாகமாகி விடும்.
அப்படி ஒரு கதை.....

click to download.

Jan 26, 2009

விக்ரம் சுஜாதா


இன்று 60 -வது குடியரசு

தினம்.


நமக்குள் கருத்து வேறுபாடு உண்டு. ஒன்று பட்ட இந்தியாவின் நடுவண் அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி உண்டு. மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் பல விஷயங்களில் ஒத்துபோகாமல் இருப்பதுண்டு. ஆனால், அவை ஒட்டுமொத்த இந்தியா என்கிற எல்லைக் கோட்டுக்கு உள்ளேதானே தவிர அதைக் கடந்து அல்ல.

இது எப்படி சாத்தியம்?

இதற்குக் காரணம் இரண்டு முக்கியமான விஷயங்கள். முதலாவது மகாத்மா காந்தி என்கிற மாமனிதன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் போட்டுத் தந்திருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றால் அமைந்த 'இந்தியன்' என்கிற அடித்தளம்.

இரண்டாவது பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் நிர்ணயசபை இந்தியக் குடியரசுக்கு உருவாக்கித் தந்த அரசியல் சட்டம்!

அந்த இருவருக்கும் இந்த குடியரசு தின நாளில் தலை வணங்குவோம்

வந்தே மாதரம்!

விக்ரம்

திரைப்படமாக வந்தபோது 'குமுதம்' இதழிலும் தொடர்கதையாக வந்தது 'விக்ரம்'. அதன்பின் புத்தகமாகவும் வந்தது.

விக்ரம் தொலைந்துபோன இந்திய ராக்கெட்டை மீட்பதற்கு ப்ரீத்தி என்னும் பெண் இன்ஜினியருடன் சலாமியா தேசத்துக்குச் செல்கிறான். அங்கு இனிய ராஜகுமாரி, ராஜா, ராஜகுரு என்று மற்றொரு உலகம்.

விறுவிறுப்பாக செல்லும் கதை.

Click to download.

Jan 21, 2009

காமராஜர் ஒரு வழிகாட்டி
தோழர்களே என்சொல்லை நம்புங்கள், உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.

"இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4 வது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி" - 17.7.1961 விடுதலை

என்ன சத்தியமான வார்த்தை!.

கர்மவீரர் காமராஜரை பற்றி இணையத்தில் கிடைத்த கட்டுரைகளை தொகுத்து ஒரு E-Book ஆக இங்கே தருகிறோம். இதன் நோக்கம் வளரும் இளம் தலைமுறையினர் இந்த தொகுப்பில் உள்ள ஒரு சில கட்டுரைகளையாவது படித்து காமராஜரின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தன்.

மேலும் விபரங்களுக்கு காமராஜரின் உறவினர்கள் எழுதும் kamarajar.blogspot.com என்ற வலைப்பதிவை பார்க்கவும்.

click to download.

Jan 18, 2009

அன்பின் தன்மையை அறிந்தபின்னே

சிறிது கவனக் குறைவால் குங்குமம் வாங்க இயலவில்லை. என் கவலை எல்லாம் ரமணி சந்திரனின் தொடர்க் கதையைப் படிக்க முடியாமல் போய் விட்டதே என்பதுதான். உடனே குங்குமம் காரியாலயத்துக்கு போன் செய்து தொடர்க் கதையை மட்டும் பேக்ஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் செய்தார்கள். தீர்ந்தது பிரச்சினை.
நன்றி,

Mr. டோண்டு ராகவன் http://dondu.blogspot.com/


Click to download.

Jan 13, 2009

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் தொகுபபு
இந்தத் தொகுப்பு நுலில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபலக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத்திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்றவகையில் மார்க்சியத்திற்கு மென்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகிறார்.
Click to download.

வெற்றி நிச்சயம் சுகிசிவம்பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றி பெறுதல் என்று நினைத்துவிட வேண்டாம். கள்ளச் சாராயம் கய்ச்சுகிரவன்கூடக் காசு வைத்திருக்கிறான். வேசிகள் கூட ஏ. சி. யில் இருக்கிறார்கள். பணத்துக்கு அப்பாலும் வெற்றி கணக்கிடப்படும்.


நேர்மை, சுயமரியாதை, கெளரவம் இவையெல்லாம் கூட வெற்றி - தோல்வியின் நிர்ணயப் புள்ளிகள். அதற்காக நேர்மையாக இருக்கிறவன் ஏழ்மையில் இருக்க வேண்டும் என்கிற அர்த்தமற்ற வெற்றி ஒரு வெற்றியே அல்ல.

பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் அவர் மனைவி ரேஷன் கடையில் இரண்டு பைகளில் கோதுமை வங்கிக்கொண்டு தூக்க முடியாமல், நடக்க முடியாமல் சிரமப்பட்டார்..... " ஆஹா என்ன நேர்மை என்று செய்தி படித்த பொது நான் மகிழவில்லை. ஒரு நேர்மையான மனிதனுக்கு எவ்வளவு கீழான இடத்தை இந்த இந்தியச் சமூகம் கொடுக்கிறது என்று சமூகத்தின் மீது எனக்கு கோபம் வருகிறது.

ஏழ்மையிலும் நேர்மை என்பது பாராட்டுக்குரியது. ஆனால் நேர்மைக்குப் பரிசே ஏழ்மை என்றால் சமூகம் தவறான பாதையில் போகிறது என்று பொருள். அதை நாம் மாற்றியே தீரவேண்டும்.

பகுதி 1
Click to download.பகுதி 2

Click to download.

Jan 12, 2009

காதலெனும் சோலையிலே ரமணிசந்திரன்.அவர் கதைகளின் கதா நாயகர்கள் வெறும் சப்போர்ட் ரோல்தான் செய்வார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தைரியம் மிக்கவர்கள். இப்போது வரும் சீரியல்கள் நாயகி மற்றும் வில்லிகள் போல இல்லை அவர்கள். அவர்கள் செயல்பாடுகள் உற்சாகம் விளைவிப்பவை.

காதலெனும் சோலையிலே எளிதாக download செய்வதற்கு இரண்டு பகுதியாக உள்ளது.

பகுதி 1

Click to download.

பகுதி 2

Click to download.

Jan 10, 2009

புதுமைப்பித்தனின் சில கதைகள்

புதுமைப்பித்தன் (Pudhumaipithan) என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.

என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும்.

...... இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும்,அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்களாம்.

உண்மை அதுவல்ல;சுமார் இருநூறு வருடங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்.சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்காவும்கூசிகிறோம்.அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாக சுற்றி வளைத்த்ச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.

........... இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்! .......(பொன்னகரம்)

குரூரமே அவதாரமான ராவணனையும்,ரத்தக் களறியையும்,மனக் குரூபங்களையும்,விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால்,ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? (புதுமைப்பித்தன் கட்டுரைகள்,1954).

அவருடைய கதைகள் சில இணையத்தில் தொகுத்தது.

Click to download.

Jan 7, 2009

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ரமணிசந்திரன்.
ரமணி சந்திரனின் கதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்களா?.

அவர் கதையில் வரும் கதாநாயகிகள் பாஸிடிவாக நினைத்து செயல் புரிபவர்கள். பிரச்சினைகள் வரும், அவற்றை அவர்கள் அழகாகச் சமாளிப்பார்கள்.

Click to download.
கனமழை நீ எனக்குகல்லூரியில் படிக்கும்போது நூலகத்துக்குப் போய் மெனக்கெட்டு எடுத்துட்டு வந்து இதையும் படிச்சிருக்கேன் ஆனா ஆண்களுக்கும் இது புடிக்கும்னு எனக்குத் தெரியாது!


Click to download.

Jan 5, 2009

இது ஒரு உதயம் ரமணிசந்திரன்

பெண், ஆண் என இருபாலருமே அவரின் நாவல்களை விரும்பிப் படிப்பதை நானே கண்கூடாகக் கண்டுள்ளேன்.

திருமதி ரமணிசந்திரன் நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் சந்தோசம், மகிழ்ச்சி வேறு எந்த நாவலிலும் எனக்கு ஏற்படுவது இல்லை.

Click to download.
ரொமான்ஸ் ரகசியங்கள்


இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன்
என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு
நீயே உலகமாக இருக்க முடியும்!.


திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம்.... காதல் குறைபாடு அல்ல... நட்புக் குறைபாடே!!.
அவள் விகடனில் வெளிவந்த ஆண்-பெண் அறியவைக்கும் உளவியல் தொடர்.


ஒவ்வொரு தம்பதியரும் நிச்சயம் படித்து உங்களது இல்வாழ்க்கையை கொஞ்சம் கூடுதல் சுவையுடன் ருசிக்கலாம்...

Click to download.

Jan 4, 2009

வைரமுத்து கவிதைகள்


அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளிஎழுச்சி பாடும்
உன்பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு....


Click to download.
முத்திரை கவிதைகள்

அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...

அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்

நீ... என்று!
- அம்மா, தாஜ்

Click to download.


முக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts