தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Dec 31, 2010

சம்போ சிவ சம்போ!-சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்


அன்பு நண்பர்களே!,

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சம்போ சிவ சம்போ மென்நூலை இங்கு சொடுக்கி பதிவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 22, 2010

ஆயிஷா குறுநாவல் தரவிரக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர்.

இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன்.ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.

தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..

ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..

நன்றி.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 5, 2010

சகோதரன் ஜெகதீஸ்வரனின் வணக்கங்கள்

இந்த மாபெரும் வலைப்பூவின் வளர்ச்சியில் நானும் பங்காற்ற வாய்ப்பு கொடுத்த நண்பர் ஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய பல்லாயிரம் நன்றிகள்.


இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைப்பதிவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் நான். என்னுடைய வலைப்பூ சகோதரன். தங்களுடைய எண்ணங்களை, கோபங்களை முன் வைக்கும் வலைப்பதிவுகளில் அரிதாக சில மட்டும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அந்த சில வலைப்பூக்களில் ஸ்ரீயின் இந்த வலைப்பூவும் ஒன்று என்பதில் பெரும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பு அனுபவத்திற்காக தேடித்திரியும் வாசகர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு பொக்கிசம். சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வழங்கும் ஒரு வலைப்பூ அழியாச்சுடர்கள் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பதிப்புரிமை என்பதையெல்லாம் தாண்டி வாசகர்களுக்கு நல்ல படைப்புகள் சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இங்கு அழியாச்சுடர்களை அறிமுகம் செய்ய காரணம். அதன் நோக்கமும் ஸ்ரீயின் நோக்கமும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டவே.

மிக விரைவில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்.

இங்கு வருபவர்களுக்கு இது ஒரு இணைய நூலகம் என்பது தெரியும். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தினை அறிமுகம் செய்யுங்கள். தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் நூல்களும், மிக அரிய படைப்புகளும் இங்கே மேலும் இணையப் போகின்றன.

வலைப்பதிவை தொடரும் 265 நண்பர்களுக்கும், நண்பர் ஸ்ரீக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.

sagotharan.wordpress.com

Jul 21, 2010

பதிவிட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஆயிற்று. 130 புத்தகங்கள், 175000 பக்கங்கள் மற்றும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருகைகள். இவையெல்லாம் விட 200 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள்.


இருந்தாலும் சிலமாதங்களாக புதிய புத்தகங்களை பதிவிட முடியவில்லை. காரணம் பெரியவேலை எல்லாம் இல்லை. ஒரு அயற்சி அல்லது ஒரு சோம்பேறித்தனம் அல்லது வேறு எதோ ஒன்று.

இடையில் ஒரு அனானியின் பின்னுட்டம்

Anonymous said...

ALready tamil writers are struggling for Minuscule monetary benefits.ippadi pozhapuzha mann alli poduringale?


இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை.


எனவே சிறிது நாட்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கி இருந்துவிட்டு மறுபடியும் வருகிறேன். முடிந்தால் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Jun 22, 2010

ஷோபாசக்தியின் படைப்புகள்


ஷோபாசக்தி ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். இப்பொழுது புலம்பெயர்ந்துள்ளார். சமகாலத் தமிழ் அரசியல் புனைகதையாளர்களில் ஒருவராவார்.

ஷோபாசக்தி பற்றி விஜய் மகேந்திரன்

...... பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று.

ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.


அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம்.

ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.

பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

நன்றி- விஜய் மகேந்திரன்


ஷோபாசக்தி-யின் ‘ம்’Click to download.ஷோபாசக்தி-யின் ‘கொரில்லா’


Click to download.ஷோபாசக்தி-யின் ‘கறுப்பு’


Click to download.ஷோபாசக்தி-யின் ‘சனதருமபோதினி’


Click to download.

May 22, 2010

கற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர்.


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று

வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு

உருண்டயும் உருளுதடி

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது

சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்

வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்

வார்த்தையில் உள்ளதடி.

Click to download.சுவாமி விவேகானந்தரின் மணிமொழிகள்

எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.நமது நிலைக்கு நாமே காரணம்!.

நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம்!.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூடஇடம் கிடைக்காது.


தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.


இதுவரை பதிவிட்ட மென்புத்தகங்களில் எனக்கு மனதில் திருப்தியும் நிறைவும் தந்த பதிவு இதுதான். மனம் நிம்மதி இல்லாமல் மிகுந்த சலனத்துடன் இருக்கும்போது படித்துப்பாருங்கள், சத்தியமாய் வேறோர் நிலைக்கு இந்த புத்தகம் நம்மை எடுத்துச்செல்லும்.
Click to download.தமிழிஷில் ஓட்டிட்டு அதிகப்படியானோர் நம்மைப்போல் பயனுற வழிசெய்யுங்கள்.

May 6, 2010

மழலையர்களுக்கான சிறுகதைகள்.


மாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.

சிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.இதில் அமைந்துள்ள எளிதான வரத்தைப் பிரயோகங்களும், இயல்பான குழந்தைகள் பேசும் மொழிகளும் நாம் நம் குழந்தைகளிடம் கதை கேட்பதுபோல் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.

மழலையர்களுக்கான சிறுகதைகள்.

இத்தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. இதுபோல இன்னும் நிறைய சிறுகதைகளை மாணவர்களிடமிருந்து மாணவர்களுக்காக உருவாக்கவேண்டும்.

Click to download.
கூல்! ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்! சி.ஆர்.எஸ்......இப்போது கல்வி, குடும்பம், சமுகம், வயது என்று பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் விழுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கல்லூரி மாணவ மாணவியர்தான். அதிலும் அவர்களின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது ஆண்- பெண் நட்பு.

"ரெண்டு நாள் பேசினதுமே 'லவ் யூ' சொல்லிடுறாங்கலே தவிர, உண்மையாக நண்பனா யாருமே இல்லை" என்று வருத்தப்படும் பெண்களைப் போலவே, " நான் பார்க்கறதுக்கு ரொம்ப சுமாரா இருக்கேன். அதனாலேயே எனக்கு பாய் ப்ரென்ட் கிடையாது" என்று புலம்புகிற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......

....எதிர்ப்படும் எல்லா ஆண்களையும் துல்லியமாக ஆராய்ந்து இவன் இவ்வளவுதான் என்று மதிப்பெண் போட்டு அவமதிப்பது பழக்கமாக இருந்திருக்கிறது ஷர்மிளாவுக்கு. சைட் அடிப்பது, காதல் கடிதம் கொடுப்பது என்று அவர்கள் சராசரி ஆண்களாக நடந்து கொள்ளும் போதெல்லாம் விலகி நின்று கிண்டலடித்திருக்கிறாள்.

அந்த சராசரிகளை எல்லாம் தாண்டிய ஒரு அசாத்திய புருஷனுக்காக அவள் காத்திருக்கிறாள். அந்த அசாத்திய புருஷன் வந்து இவளது அறிவை வென்று நிற்பான்... சொல்லிலும் செயலிலும் இவளை ஆளுவான் என்பது ஷர்மிளாவின் கனவு. பாவம் அவன் கணவன்.. அந்த நல்ல மனிதன் ஒரு சராசரி மனைவியை எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறான்.....

டாக்டர். சி. ராமசுப்ரமணியன், மதுரையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவ நிபுணர். சி. ஆர். எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்கு இத்துறையில் 27 வருட அனுபவம் உள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். எண்ணற்ற கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கி உரையாற்றியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் இவர்.

அனந்த விகடனின் இந்த தொடரை kricons முதன்முதலாக அவரது தளத்தில் கொடுத்திருந்தார். இப்போது நமது வலைப்பக்கத்திலும். நன்றி kricons!!..
Click to download.

Apr 27, 2010

பதில் சொல்லு கண்ணே ஜெய்சக்தி
வளர்ந்து வரும் எழுத்தளாரான ஜெய்சக்தி அவர்களின் நாவல்களைப் படிப்பதால் மனவளர்ச்சியும், மன அமைதியும் ஏற்படுகிறது. வரும்கலத்திற்கான ஆக்க பூர்வமான கருத்துக்களும், சிந்தனைகளும் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பது வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள்.


தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோடும் இவரின் 25 வது நாவல் இது.
படித்து மகிழ்ந்து பாராட்டுங்கள்.Part -1Click to download.


Part -2
Click to download.
Apr 4, 2010

விக்கிரமாதித்தன் கதைகள்
வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.தொடர்புடைய ஆலயம்


திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் இருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன் ஆலயம் விக்கிரமாதித்தன் கதைகளுடன் தொடர்புடைய ஆலயமாக விளங்குகிறது.


பின்னணி


காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டுவந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். ஒரு முறை தெற்கே வந்தான்.கையோடு தான் கொண்டு வந்த காளி தேவியைக் காவிரிக்கரையில் வைத்துப் பூஜித்து வந்தான். அந்தக் காளி தான் திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் குடியிருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன்.


தன்னை தினமும் பூஜித்த விக்கிரமாதித்தனிடம் காளி ஒருமுறை, "இங்கிருந்து இரண்டுகல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோவிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு முப்பத்திரண்டு கதைகளையும் உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியங்களையும் சொல்லும். அதன்படி நடந்து நீ உன்னத பதவியைப் பெறு" என்று கூறி மறைந்தாள்.
காளிதேவியின் கட்டளைப்படி அங்கு சென்ற விக்கிரமாதித்தன் வேதாளம் கூறிய முப்பத்திரண்டு கதைகளுக்கும் விடை கூறி அதற்கு சாப விமோசனம் அளித்தான்.


சிவாலயத்தின் பின்னணி


பழங்காலத்தில் அந்தக் கோவிலின் அர்ச்சகர், சிவனுக்கும் பார்வதிக்கும் பொங்கல் நைவேத்தியம் செய்து விட்டு மறதியாக அதைக் கோயிலின் உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார். வீட்டில் அர்ச்சகரின் மனைவி, 'பொங்கல் எங்கே?' என்று கேட்டபிறகு தான் ஞாபகம் வந்தவராக மீண்டும் கோவிலுக்குப் போயிருக்கிறார். பூட்டியிருந்த கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருந்து பேச்சுக் குரல் வர, சாவித்துவாரம் வழியே உள்ளே பார்த்திருக்கிறார்.


உள்ளே சிவபெருமான் பார்வதி தேவிக்கு முப்பத்திரண்டு கதைகள் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அர்ச்சகர் ஒட்டுக் கேட்பது தெரிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு அர்ச்சகரை வேதாளமாக்கி முருங்கை மரத்தில் தொங்கும் படி சபித்து விட்டார்.


விமோசனம் கேட்டுக் கதறிய அர்ச்சகரிடம் "நீ வேதாளமாகத் தொங்கும் போது ஒருவன் உன்னைக் கீழே இறக்குவான். அவனிடம் நீ கேட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி விடை கேள். அனைத்துக் கதைகளுக்கும் விடை சொல்பவன் தான் விக்கிரமாதித்தன். அவனிடம் அடிமையாக இருந்தபிறகு என்னை வந்தடைவாயாக" என்று சொல்லி மறைந்தார் சிவபெருமான்.மேலும் தெரிந்துகொள்ள --தமிழ் விக்கிபீடியா

Part 1Click to download.Part 2Click to download.
அறிவுமதி கவிதைகள் நட்புக்காலம்


காதல் மட்டும் தான் கவிதையின் களமாக பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, வெகு அரிதாக நட்பும். இந்தக் கவிதைத் தொகுப்பில் உருக அவருக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்

பேசிக் கொண்டிருந்த நம்மை

நண்பர்களாகவே

உணரும் பாக்கியம்

எத்தனைக் கண்களுக்கு

வாய்த்திருக்கும்....கனவில் கூட

என்னைக்

கிள்ளிப் பார்க்கும்

இந்தச் சுரப்பிகள்

உன்னைக்

கண்டதும் எப்படி

இவ்வளவு

இயல்பாய்

தூங்கிவிடுகின்றன.....தேர்வு முடிந்த

கடைசி நாளில் நினைவேட்டில்

கையொப்பம் வாங்குகிற

எவருக்கும் தெரிவதில்லை

அது ஒரு நட்பு முறிவிற்கான

சம்மத உடன்படிக்கைஎன்று.....தூங்கு என்று மனசு சொன்னதும்

உடம்பும் தூங்கிவிடுகிற

சுகம்

நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது...


இத்தகைய நட்பு சத்தியமா? அவரே சொல்கிறார்.....


காமத்தாலான

பிரபஞ்சத்தில்

நட்பைச்

சுவாசித்தல்

அவ்வளவு

எளிதன்று...கொஞ்சம் குற்ற உணர்ச்சி வருகிறது.......

Click to download.

Mar 23, 2010

டாக்டர் அப்துல்கலாமின் இளைஞர்கள் காலம்.
...என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள். என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை.

2020 -ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்....

.....என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65 - 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். "கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்துவிட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது''.. .....

.....தீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த ஜவான்களுக்கான அஞ்சலியாக அமர்ஜோதி ஜவானில் நான் படித்த கவிதை.

எங்கள் இதயத்தில் உங்களின் வீரத்தினால் விளக்கேற்றுங்கள்

அதன் கனல் தேசமெங்கும் பரவட்டும்

உங்கள் தியாகத்தின் செய்தி நாடெங்கும் செல்லட்டும்

அது எமது நம்பிக்கையை மேலும் தெம்பூட்டும்.......

படிக்க படிக்க நமது மனதில் உத்வேகமும் உற்சாகமும் பற்றிக்கொள்கிறது,

ஐயா!

நீவீர் இந்நாட்டில்

இறக்காத வரம் வேண்டும்,

இறந்தாலும், இம்மண்ணில்

விருட்சத்தின் விதைகளாய்

வீதியெங்கும் விழவேண்டும்....

தெருவெங்கும் அறிவு விளக்கை ஏற்றிச் செல்லும் ஒரு தலைவனுடன் பயணம் செய்ய நக்கீரனில் வந்த தொடர்; ஒரு மென்புத்தகமாக நமது வலைப்பூவில்.

புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றி.


Click to download.

Mar 10, 2010

நிலமங்கை சாண்டில்யன்


எனக்கு சாண்டில்யன் நாவல்கள் பற்றி தெரியாது எனவே அவரைப்பற்றி நெட்டிலிருந்து சுட்டது..
.......சாண்டில்யன் என் வாழ்க்கையில் இரண்டாவது ஸ்டார் எழுத்தாளர். (முதல்வர் வாண்டு மாமா). ஒன்பது பத்து வயதில் அவர் புத்தகங்கள் – கடல் புறா, யவன ராணி, மலை வாசல், ராஜ முத்திரை போன்றவை – மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரி இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலை வாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.....
..........அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள் என கருதப்படுகின்றன. அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன்....... நன்றி-- RV. கூட்டாஞ்சோறு

Click to download.

Mar 3, 2010

மூலிகைமர்மம்

நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.

மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த புத்தகம் சிறுமணிவூர் முனிசாமி முதலியார் என்பவரால் 1899 ம் ஆண்டு மிகுந்த பிரயாசை எடுத்து எழுதப்பட்டுள்ளது. பதிக்கப்பட்ட நேரத்தில் வேறு யாவரேனும் அச்சிட்டால் நஷ்டம் வசூல் செய்யப்படும் என்று புத்தகத்தில் ஆசிரியர் எச்சரிக்கை செய்துள்ளார்.

நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இத்தகைய பொக்கிஷங்களை பாதுகாத்து வைப்பது நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினர்களுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Click to download.

Feb 22, 2010

நித்தமும் உன் நினைவு காஞ்சனா ஜெயதிலகர்
வெளிநாட்டில் தம் சொந்தங்களை விட்டு வெகுதூரம் வாழும் நம் தமிழ் நெஞ்சங்களுக்காக ஏராளமான சமையல் குறிப்புகளை அள்ளிக்கொடுக்கும் தளங்கள் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது அறுசுவை டாட் காம் இனிய தமிழில் ஒரு சமையல் இணையதளம்.

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், குடும்பங்களை நாட்டில் விட்டுவிட்டு தனியாக இருக்கும் பேச்சிலர்களின் சமையல் தனி ரகம் தான்.

அதுவரை சமையலறைப் பக்கமே போகாமல் இருந்த நான், முதல் முதலாக குடும்பத்தை விட்டு தனியாக செல்லும்போது சாப்பாட்டிற்கு என்ன செய்வேன்
என்பதே மிகப்பெரிய விசயமாக இருந்தது. ஒன்றுமே தெரியாத தம்பி எளிதாக சமையல் செய்ய என் சகோதரி கொடுத்த சில குறிப்புகளை மற்றவர்களுக்கு
பயன்படும் என்ற எண்ணத்தில் இல்லாவிட்டாலும் என் சொந்த சேமிப்பிற்காக பதிவிடுகிறேன்.


ரவா தோசை.

ரவை ஒரு டம்ளர் எடுத்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே அளவு மைதா மாவு எடுத்து உப்பு சேர்த்து தோசை பதத்திற்கு நன்கு கரைத்துக்கொள்ளவும். ரவையை நன்கு பிசைந்துவிட்டுப் பின் மைதா சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒரு மிளகாய், இஞ்சி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கிளறிவிட்டு தோசை செய்தால் நன்றாக இருக்கும். இதுவரை செய்து பார்த்திராத பேச்சிலர்கள் முயற்சித்துப் பாருங்கள் எளிதாக செய்யலாம்.நித்தமும் உன் நினைவு காஞ்சனா ஜெயதிலகர்
Click to download.

Feb 9, 2010

சதுரகிரி யாத்திரை
சதுரகிரி மலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்திருந்தாலும், சிறுவயதில் இரண்டு மூன்று முறை சென்றுவந்திருந்தாலும் அதனுடைய உண்மையான சிறப்புகளையும் அற்புதங்களையும் அறிந்ததில்லை.


சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சதுரகிரியின் சிறப்புகளை சொல்லும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதுமுதல் யார் சதுரகிரியின் சிறப்புகளை சொன்னாலும் எங்களுருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுவதில் ஒரு இனம் தெரியாத சந்தோசம்; இருந்தாலும் அதன் உண்மையான அற்புதங்களை உணர்ந்தவனில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.


இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த மலையின் அடிவாரமாகிய தாணிப்பாறைக்கு சென்ற மாட்டுவண்டிப் பயணங்களும், அங்கிருக்கும் வழுக்குப்பாறையில் சருக்கிவிளையாடி கிழித்துக்கொண்ட டவுசர்களும்... ம்...ம்...

சதுரகிரியின் அற்புதங்களையும், போகத்தேவையான வழிகாட்டுதல்களையும் நண்பர் பிரபாகரன் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கிரார். இங்கு சென்று பாருங்கள்.

நீண்ட நாட்களுக்கு முன்பு kricons தனது வலைப்பூவில், சக்தி விகடனில் வந்த தொடரை தொகுத்து மென் புத்தகமாக கொடுத்திருந்தார். நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமிக்கும் முயற்சியாக இதோ நமது வலைப்பூவிலும்.

தொகுத்த kricons அவர்களுக்கு மிக்க நன்றி.

Click to download.

Jan 21, 2010

ஆத்மா, மோட்சம்_நரகம்- பெரியார்
நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.

அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.

.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......

.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....

.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....

படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..


Click to download.

ஏன் எதற்கு எப்படி சுஜாதாபடிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.

பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).


ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

Click to download.

Jan 7, 2010

தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும் சுதேசமித்திரன்பொங்கலோ பொங்கல் ...

இனிய


பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


திரைக்கதை இல்லாத சினிமா என்பது ஆணுறை அல்லது பெண்ணுறை இல்லாமல் பாலியல் தொழிலாளியிடம் போவதைப் போல துணிகரமானது.

உலகத்திலேயே அபத்தமானதொரு சினிமாவுக்குக்கூட திரைக்கதை என்பதாக ஒன்று இருந்துதான் தீரவேண்டும்.ஆனால் இதையெல்லாம் கடந்து எடிட்டர் பார்த்து எதைச் செய்து தருகிறாரோ அதுவே சினிமா என்று கையைக்கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த வகையில் தமிழ் சினிமா உலக சாதனையோன்றையே படைத்துவிட்டது என்பதுதான் முதல் விசேஷம்.......இந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே என்னும் திரைப்படம் 1970 ல் வெளிவந்த Robert Bolt எழுதி David Lean இயக்கிய Ryan's Daughter எனும் ஆங்கிலப் படத்தின் பாத்திரங்களைக் காப்பியடித்து வெளியாகிறது. அது காப்பி என்று ரயான்ஷ் டாட்டரை அறிந்திராதவர்கள் தெரிந்துகொள்ள இயலாத வகையில் திரையுலகினுக்குள் பெரும் புரட்சி என்று செய்து காட்டியது.........பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஏற்படுத்திய அலையில் ஆளாளுக்கு கிராமத்துக்குள் கேமராவைத் தூக்கிக்கொண்டுபோய் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பிக்க நேர்ந்த அவலம்தான் திரைக்கதை இல்லாத சினிமாவின் தொடக்க காலம்....

.......இன்றைக்கு உலகநாயகன் கமலஹாசன் சினிமாவை முன்னே கொண்டு செல்வேன் என்று குருதிப்புனல், தேவர்மகன், ஹே ராம், மகாநதி, அன்பே சிவம் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகராக இருந்தும் அவரால் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவது இனியும் சாத்தியமேயில்லை என்கிற நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது....

......சினிமாவும் அரசியலும் தொடர்ந்து ஊடும் பாவுமாகப் பின்னப்பட்டுக்கொண்டே வருகின்றன. திருநாவுக்கரசு, திருமாவளவன் போன்ற பிறவி அரசியல்வாதிகள் கூட சினிமாவில் தலைகாட்டினால்தான் ஆச்சு என்று ஏமாந்துபோகிற அளவுக்குப் போய்விட்டது......

.....எனது தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை இந்தக் கேள்வியை வகுப்பில் கேட்டார். சினிமாவில் எதனால் பாடல்கள் இடம் பெறுகின்றன? என்று. யாருக்கும் விடை தெரியவில்லை. அவரே சொன்னார். காதலர்கள் பழகுகிற காலம் நீண்டதாக இருக்கலாம். அதைச் சுருக்கித் தர ஒரு பாடல் போதும். இது ஒரு சூத்திரம்.....

இணைய வாசகர்களுக்காக சுதேசமித்திரன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை இது. வித்தியாசமாக இருந்தது என்று பதிவிட்டுவிட்டேன். ( தொகுத்த யாரோ ஒரு அன்பருக்கு நன்றி).


Click to download.


முக்கியமான பதிவுகள்...நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts