ஷோபாசக்தியின் படைப்புகள்

ஷோபாசக்தி ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். இப்பொழுது புலம்பெயர்ந்துள்ளார். சமகாலத் தமிழ் அரசியல் புனைகதையாளர்களில் ஒருவராவார்.
ஷோபாசக்தி பற்றி விஜய் மகேந்திரன்
...... பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று.
ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.
அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம்.
ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.
அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.
அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.
பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.
அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.
“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.
நன்றி- விஜய் மகேந்திரன்
ஷோபாசக்தி-யின் ‘ம்’

Click to download.
ஷோபாசக்தி-யின் ‘கொரில்லா’

Click to download.
ஷோபாசக்தி-யின் ‘கறுப்பு’

Click to download.
ஷோபாசக்தி-யின் ‘சனதருமபோதினி’

Click to download.