தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
ரோஜாமுள் ரமணிசந்திரன்
உங்களுடைய 35 நாவல்கள் படித்திருக்கிறேன். எத்தனை அற்புதமானது. உங்களுடைய பெயரை எங்கு எந்தப் புத்தகத்தில் பார்த்தாலும் சந்தோசம். உங்கள் புத்தகத்தைப் படித்தாலும், படித்ததை மீண்டும் படிக்க ஆவல்.
Click to download.
எல்லோருக்கும் ஆசை உண்டு ரமணிசந்திரன்
திருமதி ரமணிசந்திரனின் கதைப் புத்தகம் கைக்குக் கிடைத்து விட்டால் என்னைப் பசியோ, தாகமோ, துக்கமோ, நெருங்காது. அதில் என்னையே அறியாமல் கண்ணீர் விட்ட எத்தனையோ இடங்கள், அதேபோல் அகமகிழ்ச்சியால் திருப்தி அடைந்த எத்தனையோ இடங்கள்.
Click to download.
அண்டத்தின் அற்புதங்கள்3
ஏகவியல் என்பது அறிவியல் பெருமக்கள் எதிர்காலத்தில் அடையத்துடிக்கும் முடிவான உண்மை. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
17 ம் நூற்றாண்டில் நியுட்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். உலகில் நிகழும் இயக்கம், விண்மீன்கள் இவற்றின் இயக்கம் அனைத்தும் ஒரே விதிக்குள் உட்பட்டு நிகழ்கிறது என்று கூறியுள்ளார் நியூட்டன்.
மிக அழகான படங்களுடன் படிப்பதற்கு தூண்டுவதாக உள்ளது.
Click to download .
ஆகாயம் காணாத நட்சத்திரம் இந்திரா சௌந்தரராஜன்
எழுத்துக்களில் பகுத்தறிவு மற்றும் ஆன்மீக சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எல்லா அறிவியல் உண்மைகளையும் எளிய தமிழில் எளிய உரைநடையில் மற்றவருக்கு கதையுடன் சேர்த்து விளக்குவது அவரது தனிச்சிறப்பு.
Click to download.
என் சரித்திரம் உ. வே. சாமிநாதையர்.
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தa. பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது. உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.உ.வே.சாமிநாதையர் தனது சுயசரிதத்தை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார், இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது.Click to download.
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
வண்ணதாசன்.
வண்ணதாசன் புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அசோகமித்திரன்
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து.
ஜி. நாகராஜன்
பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.
கி. ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
Click to download.
இந்து மதமும் தமிழர்களும் தந்தை பெரியார்
திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும், இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ்கட்சி மாகாண மகாநாட்டில் "திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல " என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்செஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறோம்.
இது தந்தை பெரியார் அவர்களுடைய புரட்சிகரமான கருத்தாகும்.
Click to download.
வெண்ணிலவு சுடுவதென்ன ரமணிசந்திரன்
I am also a fan of RC. But we can predict her story easily still like her writings. Me and my mom used to read together...
I read fast and cann't wait for my mom and turn page fast & irritate my mom.
Click to download.
உரிமை உறங்குகிறது! லக்ஷ்மி
இவரும் பெண்களுக்கு மிகப்பிடித்தமான ஒரு எழுத்தாளர்.
இவருடைய நாவலை எங்கள் ஊரில் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து படிப்பதற்கென்று முன்பு ஒரு கூட்டமே
இருந்தது.
தேவநாதன் கெளரி இரண்டு குழந்தைகள் என்று ஒன்பது ஆண்டுகளாக அழகிய நதியாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் நளினா வருகிறாள், புயல் வீசுகிறது.
இறுதியில் புயலுக்கு பின் அமைதி தானே.
Click to download.
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
அன்புடைய நண்பர்களுக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்கள...