தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jul 21, 2009

100 வது பதிவு

எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்.












ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் என்போன்றவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் கிடைத்து விடுவதில்லை. வலையில் தேடியபோது கொஞ்சம் கிடைத்தது. அதை அப்படியே எல்லோருக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி பதிய ஆரம்பித்து இப்போது 100 வது பதிவை எட்டி சதம் அடித்து விட்டது.

இந்த நேரத்தில் சிலபேருக்கு நன்றி சொல்லுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

இணையத்தில் என்போன்றோர் எளிதாக பதிவிட்டாலும், யாரோ ஒருவர் அந்த மென்புத்தகங்களை மிகக் கவனமாக தேடி எடுத்து அல்லது ஒவ்வொரு பக்கங்களாக ஸ்கேன் செய்து அதன் பின்புலத்தில் மிககடினமாக தங்களது உழைப்பை செலவிட்டிருக்கவேண்டும். எனவே அந்த முகம் தெரியாத தங்கத் தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.

திரு. அருள்ராஜ் அவர்களின் booksforpeople.blogspot.com. இந்த தளத்தில்தான் தமிழில் மென்புத்தகங்கள் இருப்பதை முதன்முதலில் அறிந்தேன். அதன் பிறகு திரு. pkp.in மற்றும் சில தளங்கள். இவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இவர்களில் திரு அருள்ராஜ் இப்போது பதிவதை நிறுத்திவிட்டார் என்று நினைக்கிறேன்.

முதலில் அதிகமான நேரம் இணையத்தில் உலவ முடிந்தது. இப்போது வேலைப்பளு மற்றும் வேறுசில காரணங்களால் முன்புபோல இணையத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை எனவே முன்புபோல அடிக்கடி பதிவிட இயலவில்லை.

சில நண்பர்கள் இந்த பதிவின் முலம் கிடைத்துள்ளார்கள். நண்பர் திரு. அவர்கள் மாயவலை புத்தகத்தை படித்து அதன் மீதி பக்கங்களை கண்டறிந்து அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்துள்ளார் (இப்போது முழு புத்தகத்தையும் மறுபடி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்). மற்றும் சில நண்பர்களும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்வது உண்டு. அவர்களுக்கும் மற்றும் இந்த தளத்தை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திருமதி. ரமணிச்சந்திரன் அவர்களுக்கு, உங்களின் எழுத்துக்களின் மீது தீராத ஆசை கொண்ட ரசிகர்களின் வேண்டுகோள்.


இந்த தளத்திற்கு அதிகமானவர்கள், திருமதி.ரமணிச்சந்திரன் நாவல்களை தேடித்தான் வருகிறார்கள். ஆனால் ziddu விலிருந்து அணைத்து நாவல்களும் delete செய்யப்பட்டு விட்டது. இது புத்தகங்களின் உரிமையாளர் அல்லது பதிப்பகத்தின் முயற்சியாகத்தான் இருக்கும்.

கண்டிப்பாக அவர்களின் பார்வையில் இது சரியான செயலாகத்தான் இருக்கமுடியும். அதேநேரத்தில் அவர்களுக்கு புத்தகப் பிரியர்களான எங்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்.

நாங்கள் உங்களின் தீவிரமான ரசிகர்கள், மற்றும் வெளியூர்/வெளிநாட்டில் குடியிருப்பவர்கள். நாங்கள் ஊரில் இருக்கும்போது உங்களின் ரசிகர்களாக இருந்து உங்களின் புத்தகங்களை தவறாமல் கடைகளில் வாங்கி படித்தவர்கள்.

இப்போது பிழைப்புக்காக வெளியூர்களுக்கு வந்தும், உங்களின் புத்தகங்களின் மீதும், எழுத்துக்கள் மீது தீராத ஆசை கொண்டிருப்பவர்கள்.

நமது ஊர்களைப்போல் வெளியூர்களில், வெளிநாடுகளில் உங்களது புத்தகங்கள் கிடைப்பது கிடையாது. அதனால்தான் எங்களைப்போன்றோர் மென்புத்தகங்களைத் தேடுகின்றோம்.

படிப்பதற்கு அசெளகரியமாக இருந்தாலும் உங்கள் எழுத்துக்களின் மீதுள்ள மோகம், எங்களை மென்புத்தகங்களாகவேனும் படிக்க தூண்டுகிறது. இதன்மூலம் எந்தவிதத்திலும் தமிழ்நாட்டில் தங்களது புத்தகங்களின் விற்பனை குறையாது. மேலும் நம்நாட்டில் பொதுவாக யாரும் மென்புத்தகங்கள் படிப்பதும் கிடையாது.

இதுபோன்று மென்புத்தகங்களை படிக்கும்போது அதன்மீது ஆசை கொண்டு நமது நாட்டுக்கு வந்து அதனை புத்தகமாக வாங்கவே விரும்புகிறோம். எனவே மென்புத்தகங்களை படிக்கும் எங்களை தவறாக எண்ணவேண்டாம். இதுபற்றிய திரு. pkp அவர்களின் பதிவு http://pkp.blogspot.com/2008/03/blog-post_25.html


YOU CAN WIN


WINNERS DON'T DO DIFFERENT THINGS, THEY DO THINGS DIFFENTLY.














பொதுவாக ஆங்கில புத்தகங்கள் படிப்பது கிடையாது ( அந்த அளவிற்கு சரக்கு இல்லேங்கோ). ஆனால் இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது என்று கேள்விப்பட்டு வாங்கி புரட்டினேன்.

மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கும் ஆங்கிலம் முதலில் என்னைக் கவர்ந்தது. பின்பு தான் சொல்லவந்ததை ஒரு கதைமூலம் விளக்குவது மற்றும் ஏதேதோ செய்து புத்தகத்தை படிக்கவைத்து ஒரு புயலையே ஏற்படுத்திவிட்டார். உதாரணத்துக்கு ஒன்று
A boy was flying a kite with his father and asked him what kept the kite up. Dad replied,"The string." The boy said, "Dad, it is the string that is holding the kite down." The fatherasked his son to watch as he broke the string.

Guess what happened to the kite? It came down. Isn't that true in life? Sometimes the very things that we think are holding us down are the things that are helping us fly. That is what discipline is all about.

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தால் தாருங்கள் பதிவிட்டுவிடுகிறேன்.

Click to download.



மனிதனுக்குள் ஒரு மிருகம் -மதன்















எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம்!.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பதுங்கியிருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டால்தான் அதைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மனோதத்துவ மேதை சிக்மன்ட் ஃப்ராய்டு எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வன்முறை உணர்வுகள் இருக்கிறது. எப்படிப்பட்ட மோசமான குற்றத்தையும் செய்யத் தூண்டும் வெறி உணர்வு அவனுடைய ஆழ்மனதில் தங்கியிருக்கிறது. ஓரளவுக்கு அதைக் கட்டுப்படுத்துவது சமூகக் கட்டுப்பாடும் சமுதாய சட்டதிட்டங்களும், பின்விளைவுகளும், குற்ற உணர்வும்தான்! என்கிறார்.

மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல... கேட்டவர்களும் அல்ல! வெளியே மனிதன், உள்ளே மிருகம் -இரண்டும் சேர்ந்த கலவைதான் நாம்!

இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜீ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது. தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவெ கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் பொவதோ கடலில். ஆரம்பம் முடிவில்லாத பெருங்கடல். -மதன்.

Click to download.



தமிழ் புத்தக ஆர்வலர்களுக்கு. ஒரு புதையல்






மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது.

உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்

மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம்.

Click for a புதையல்.


அப்புறம் சந்திக்கலாம் அதுவரைக்கும் எல்லோரும் வந்து பார்க்கிறதுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட மறந்துராதிங்க.

Jul 14, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி அ. முத்துலிங்கம்















கீத் மில்லர் சொல்கிறார், 'உண்மையான கதைகளை எழுதவேண்டாம், யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்'. அப்படித்தான் இந்தக் கதைகளும்.


எல்லாமே உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசம் கலக்கப்பட்டவைதான். நாலுவருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை.


கணையாழி, காலச்சுவடு, இந்தியா டுடே, ஆனந்த விகடன், சதங்கை, காலம், உயிர் நிழல், அம்மா, சொல் புதிது போன்ற இதழ்களில் வெளியானவை. ஆப்பிரிக்கா, கனடா, போஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.


கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டுப் போய்விடும். அதற்கு பிறகு அவை திரும்பிப் பார்ப்பதேயில்லை.



வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.



நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர் காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். இந்த நூல் அந்த வாசகருக்கு: அந்த உலகத்துக்கு.




Click to download.

Jul 7, 2009

கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா.








சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்பிட்டிருக்கிறார். மல்லிகைப் பூவாக இருந்த இட்லி அவர் மனதைக் கவர்ந்துவிட, இதை தினமும் சிங்கப்பூரில் உள்ள என் ஓட்டலுக்கு அனுப்ப முடியுமா? என்று கேட்டிருக்கிறார். இப்போது அதிகாலையில் சட்னி, சாம்பார் சகிதமாக சிங்கபூருக்குப் பறக்கிறது மயிலாப்பூர் இட்லி!

இட்லி இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வியாபார வித்தை உங்கள் உங்கள் கையில் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் ஏற்றுமதியில் இறங்கக் கூடாது?. ஏற்றுமதி என்றாலே கோடிக்கணக்கான ரூபாய்க்கு தாதுக்களையும், கனிமங்களையும்தான் அனுப்பவேண்டும் என்பதில்லை. அது ரொம்பவே சிம்பிளான விஷயம்தான்....

எனக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது.
நான் குக்கிராமத்தில் இருக்கிறேன்..
நான் கல்லூரிப் படிப்பெல்லாம் படிக்கவில்லை
எனக்குத் தொழில்நுட்பம் தெரியாது...
என்னால் பெரிய அளவில் மூலதனம்போடமுடியாது...'

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடாமல் தயங்கிநிற்பதற்கு இன்னும் என்னெவல்லாம் உங்களால் காரணம் சொல்லமுடியுமோ எல்லாவற்றையும் சொல்லுங்கள் அதற்கு ஒருஸ்ட்ராங்கான பதில் இருக்கிறது. அந்த பதில்...இஸ்மாயில் கனி!......

ஏற்றுமதி ஆவணங்கள் பட்டியல் நீளமாகப் போய்க்கொண்டே இருக்கிறதே என்று மலைத்து நின்றுவிடாதீர்கள். பார்ப்பதற்கும்படிப்பதற்கும் பக்கம் பக்கமாகத் தோன்றும் இந்த விஷயங்கள்உள்ளே நுழைந்த பிறகு மிக எளிதாகத் தோன்றும்....

நாணயம் விகடனில் இத்தொடரை எழுதிய ஆர்.அசோகன், எம். ஏ. டி.சி. பி, போன்ற பல பட்டங்களோடு பன்னாட்டு வணிகம் தொடர்பான விஷயங்களில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் இருக்கிறது. மத்திய அரசு, தென்னிந்திய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்றுமதி கொள்கையை வடிவமைக்கத் தேவையான விஷயங்களை அளித்திருக்கிறார்..

குளத்தில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.ஆனால், என்ன செய்தால் தண்ணீரில் மூழ்காமல் தப்பிக்கலாம்...நமக்கு அடிப்பைடயான தேவைகள் என்னன்ன என்பனவற்றை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா..
Click to download.

நிறையப்பேர் அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts