தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Oct 9, 2009

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் ப்ரியன்












காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு.


நின்ற பின்னும்

சிறிது நேரம்

இலை தங்கும் மழைப்போல

நின்றுபோன இடத்தில் எல்லாம்

கொஞ்சநேரமாவது தங்கிச்

செல்கிறது அழகு.



எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்

என்றாய்

நீ மழையில் நனைவது

கண்டதிலிருந்து என்றேன்

ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்

அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது

நீயும் நனையத் தொடங்கினாய்

நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்.



எவ்வளவு பத்திரமாய்

நடந்தாலும்

உன்னையும் அறியாமல்

வழியெங்கும்

பெய்துகொண்டே

செல்கிறது

உன் அழகுமழை.



ஆகா!!! முழுக்க முழுக்க காதலும் கவிதையும் மழையாய்ப் பொழிகின்றன.



ஜன்னலில் பார்த்ததைவிடவும்

பக்கத்தில் பார்த்தல்

அழகு!

நீயும்!

மழையும்!




வார்த்தையாகக் கூட இல்லை

ஒரு எழுத்தாகக் கூட

இல்லாதவனை

ஒரு கவிஞனாய் மாற்றிய

பெருமை

உனக்கும்

மழைக்கும் மட்டுமே!



யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா?



மழை ரசித்தாலும்

உனை ரசித்தாலும்

நேரம் கடப்பதும் தெரிவதில்லை

உயிர் கரைந்து

ஓடுவதும் தெரிவதில்லை.


Click to download.





2 comments:

  1. வணக்கம்

    பொதுவாக பிரியன் கவிதைகள் நன்றாக இருக்கும்.
    தரவிறக்க தந்தமைக்கு நன்றி

    இராஜராஜன்

    ReplyDelete
  2. //வனம் said...
    வணக்கம்

    பொதுவாக பிரியன் கவிதைகள் நன்றாக இருக்கும்.
    தரவிறக்க தந்தமைக்கு நன்றி

    இராஜராஜன்//


    அனைத்து கவிதைகளும் குறிப்பாக அதற்காக தேர்ந்தெடுத்த படங்களும் மிக மிக அருமை!!!. வருகைக்கு நன்றி இராஜராஜன்

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts