கூல்! ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்! சி.ஆர்.எஸ்.
.....இப்போது கல்வி, குடும்பம், சமுகம், வயது என்று பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் விழுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கல்லூரி மாணவ மாணவியர்தான். அதிலும் அவர்களின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது ஆண்- பெண் நட்பு.
"ரெண்டு நாள் பேசினதுமே 'லவ் யூ' சொல்லிடுறாங்கலே தவிர, உண்மையாக நண்பனா யாருமே இல்லை" என்று வருத்தப்படும் பெண்களைப் போலவே, " நான் பார்க்கறதுக்கு ரொம்ப சுமாரா இருக்கேன். அதனாலேயே எனக்கு பாய் ப்ரென்ட் கிடையாது" என்று புலம்புகிற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்......
....எதிர்ப்படும் எல்லா ஆண்களையும் துல்லியமாக ஆராய்ந்து இவன் இவ்வளவுதான் என்று மதிப்பெண் போட்டு அவமதிப்பது பழக்கமாக இருந்திருக்கிறது ஷர்மிளாவுக்கு. சைட் அடிப்பது, காதல் கடிதம் கொடுப்பது என்று அவர்கள் சராசரி ஆண்களாக நடந்து கொள்ளும் போதெல்லாம் விலகி நின்று கிண்டலடித்திருக்கிறாள்.
அந்த சராசரிகளை எல்லாம் தாண்டிய ஒரு அசாத்திய புருஷனுக்காக அவள் காத்திருக்கிறாள். அந்த அசாத்திய புருஷன் வந்து இவளது அறிவை வென்று நிற்பான்... சொல்லிலும் செயலிலும் இவளை ஆளுவான் என்பது ஷர்மிளாவின் கனவு. பாவம் அவன் கணவன்.. அந்த நல்ல மனிதன் ஒரு சராசரி மனைவியை எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறான்.....
டாக்டர். சி. ராமசுப்ரமணியன், மதுரையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவ நிபுணர்.
சி. ஆர். எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்கு இத்துறையில் 27 வருட அனுபவம் உள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். எண்ணற்ற கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கி உரையாற்றியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் இவர்.
அனந்த விகடனின் இந்த தொடரை kricons முதன்முதலாக அவரது தளத்தில் கொடுத்திருந்தார். இப்போது நமது வலைப்பக்கத்திலும். நன்றி kricons!!..Click to download.