கற்றதும் பெற்றதும்..சுஜாதா.

சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவரது “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. அது முதல் தொடர்ந்து எழுதி வந்துள்ளார் இந்த 60 + வயது இளைஞர் !
சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா கதை-வசனங்கள், தொலைகாட்சி நாடகங்கள் என பல துறைகளில் கலக்கும் இவரை ‘மல்டி-மீடியா எழுத்தாளர்’ என்று அழைக்கலாம்சுஜாதாவின் இயற்பெயர் … சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். பிறகு ஏன் ‘சுஜாதா’ என்ற பெயரில் எழுதுகிறார் ? அவரே சொல்கிறார்: “எனது ”இடது ஓரத்தில்“ என்ற (முதல்) சிறுகதை 1962 வருடம் ‘குமுதம்’ பத்திரிக்கையில் வெளஞ்வந்தது - ரங்கராஜன் என்ற பெயரில். ‘குமுதம்’ (ரா.கி.) ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் புதிய மனைவி பெயரைச் சேர்த்துக் கொள்ள ‘சுஜாதா’ தான் மிஞ்சியது. அப்புறம் நடந்தது தெரிந்த விஷயம்.”
சுஜாதாவின் முதல் சிறுகதை … சுஜாதாவின் முதல் கதை 1953 வருடம் ‘சிவாஜி’ என்ற பத்திரிக்கையில் வெளஞ்வந்தது. அதைப் பற்றி சுஜாதா சொல்கிறார்: “சிவாஜி பத்திரிக்கையில் முதல் முறை அந்தக் கதை வந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவில்லை. அந்த சிவாஜி பத்திரிக்கை பிரதியை எனக்கு இப்போது யாரவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியைத் தருவேன்

If any problem with download comment on this post.
No comments:
Post a Comment