புதுமைப்பித்தனின் சில கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan) என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.
என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும்.
...... இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும்,அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்களாம்.
உண்மை அதுவல்ல;சுமார் இருநூறு வருடங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்.சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்காவும்கூசிகிறோம்.அதனால்தான் இப்படிச் சக்கர வட்டமாக சுற்றி வளைத்த்ச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.
........... இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!
.......(பொன்னகரம்)
குரூரமே அவதாரமான ராவணனையும்,ரத்தக் களறியையும்,மனக் குரூபங்களையும்,விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால்,ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? (புதுமைப்பித்தன் கட்டுரைகள்,1954).
அவருடைய கதைகள் சில இணையத்தில் தொகுத்தது.
Click to download.