தோழர்களே என்சொல்லை நம்புங்கள், உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.
"இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4 வது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி" - 17.7.1961 விடுதலை
என்ன சத்தியமான வார்த்தை!.
கர்மவீரர் காமராஜரை பற்றி இணையத்தில் கிடைத்த கட்டுரைகளை தொகுத்து ஒரு E-Book ஆக இங்கே தருகிறோம். இதன் நோக்கம் வளரும் இளம் தலைமுறையினர் இந்த தொகுப்பில் உள்ள ஒரு சில கட்டுரைகளையாவது படித்து காமராஜரின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தன்.
மேலும் விபரங்களுக்கு காமராஜரின் உறவினர்கள் எழுதும் kamarajar.blogspot.com என்ற வலைப்பதிவை பார்க்கவும்.
click to download.
குறிப்பாக இளைஞர்கள் படிக்கவேண்டும்.
ReplyDelete