ஒரு நிகழ்ச்சி
ஆடுகள் கூடையில் கொட்டிவைக்கப்பட்ட காய்ந்த புற்களை மேன்றுகொண்டிருந்தன. அமர் கைகளை குறுக்காகக் கட்டி மேலே பார்த்துக்கொண்டிருந்தார். எப்படி இருக்கீங்க அமர்?.
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க?
கொஞ்சம் வேல அதிகம். ஊருக்கு போகனும்னு போனமுறை சொன்னீங்க தானே?.
ஆமா லீவு கேட்டிருக்கிறேன். அரபி ஒன்னும் சொல்லமாட்டேங்கரான். எப்பயும் நான் ரம்ஜான் முடிஞ்சுதான் போவது வழக்கம். இந்த முறையும் அப்படி போனு சொல்லிருவான்னு பயந்துக்கிட்டிருக்கேன். பாப்போம் கொடுத்துருவான்னு நெனைக்கிறேன்.
அதான் வீட்டு நெனப்பு வந்து இப்படி மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்கள். டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சா. இப்பவே எடுதிருங்கள் கொஞ்சம் கம்மியா இருக்கு.
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, அரபி தானே எடுத்து தருவான். ப்லாக் பண்ணி வச்சிருக்கேன்.
பையன் கூட பேசுவீங்கதானே?
பையன் இல்ல சார்; பொண்ணு. ஒன்றரை வயது ஆகுது.
பேசுவாளா?.
எப்ப போன் அடிச்சாலும் அவதான் எடுப்பா. எடுத்துகிட்டு எதாவது பேசிக்கிட்டு இருப்பா. இப்ப கூட அங்கிருந்து தான் வரேன் அழுதிட்டா.
ஒங்க பொண்ணு அழுதாளா?, நீங்களா?
ம்... ம்... அது வந்து எனக்குத்தான்.. கண்ணீர் தானாகவே வந்துரும். போனை காதிலேயே கொஞ்சநேரம் வைத்திருப்பேன் அப்புறம் நேரம் ஆனதும் கட் பண்ணீட்டு வந்துருவேன்.
இங்க வரும்போது எத்தனை மாதம்?.
மூனு மாதம் வயித்தில. வந்து கொஞ்சநாள் தூங்கவே முடியல.
இரண்டு வருடம் ஆகும் வரைக்கும் புள்ளைங்கள பிரிய மனசு வராது. இந்த தடவை போய் ரொம்ப நாள் இருந்துட்டு வாங்க.
உங்க வொஃப் எப்படி?.
ஒவ்வரு தடவை போன் செய்யும் போதும் இந்த முறை இரண்டு வருடம் இருந்துட்டு போங்கள் என்றுதான் சொல்லும்.
அப்புறம் என்ன நீங்க தான் இங்கவந்து பத்துவருடம் ஆயிருச்சில்ல போயிட்டு ஒரு இரண்டு வருடம் கழிச்சி வாங்க.
நானும் அதைத்தான் யோசிச்சேன் ஆனா..
அனா?..
அதுக்கு அப்புறம் இதைப்போல பிரச்சனை இல்லாத அரபி வீடு கிடைக்காது பாருங்க!...
ஒரு புத்தகம்.
நான் உன்னை நீங்கமாட்டேன் - உமபாலகுமார்
Click to download.