தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

May 27, 2009

சமுதாயவீதி 'தீபம்' நா. பார்த்தசாரதி

'சமுதாயவீதி' நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது.










நா.பா. அவர்களுக்கு சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நதிக்குடி. மகாகவி பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியவர்.

இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். வணிக நோக்குடனான பத்திரிகைகளுக்கிடையே, குன்றிலிட்ட தீபம் போல் "தீபம்" பத்திரிகை ஒளிர்ந்தது. ஏறத்தாழ 23 ஆண்டுகள் ஒரு தவம் போல, ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தமிழகத்தில் வெளிக்கொணர வேண்டுமானால், அது லேசுப்பட்ட காரியமில்லை; அந்த அசகாயச் செயலை, மிகுந்த தைரியத்துடன் நிறைவேற்றிக்காட்டி நா.பா. தமிழ்கூறும் நல்லுலகில் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.

நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
நன்றி -விக்கிபீடியா


Click to download.

1 comment:

  1. Anonymous5/1/13


    http://archive.org/search.php?query=mediatype%3Atexts%20AND%20collection%3Aopenreadingroom%20AND%20subject%3A%22Na.%20Parthasarathy%22
    You may be delighted to peruse the link above which has 41 novels and essayos of Na.Parthasarathi Besides 172 short stories in the parent site
    http://archive.org/details/openreadingroom

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts