சந்திரன் 27 நாள் 7 மணித்தியாலத்தில் ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது. இதன் பாதையும் நீள்வளைய வடிவமாக இருப்பதால் பூமியிலிருந்து இதன் தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியில் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் சந்திரன் இருக்கும் கோணங்களையும் அந்த இரண்டு இடங்களின் இடைத் தூரத்தையும் அறிந்தால் இவற்றிலிருந்து சந்திரனின் தூரத்தை மிகவும் இலகுவாக கணிக்கலாம்.....
பூமியிலிருந்து ஒரு கல்லை 11.2 கி.மீ. (7 மைல்) வேகத்துடன் ஒரு கல்லை எறிய முடியுமானால் அக்கல்லானது அப்படியே மேல்நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கும், பூமிக்குத் திரும்பி வராது. இந்த வேகத்தைத் தப்பும் வேகம் velocity of escape என்பர். சந்திரனில் தப்பும் வேகம் 2.4 கி.மி. ஆகும்....
கிரகங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது சனியாகும். இதன் சார்படர்த்தி 0.7. நீரிலும் பாரம் குறைந்தது. ஒரு பிரமாண்டமான சமுத்திரத்தில் இதனை வைத்தால் இது மிதக்கும்....
1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஹாலியின் வால்வேள்ளியின் வலுக்கூடாகப் பூமி சென்றது. அப்போது அதன் வால் ஏறக்குறைய 3.2 கோடி கி. மி. நீளம் இருந்தது. வால்வெள்ளியின் தலை பூமியுடன் மோதினால் ஆபத்து ஏற்படலாம், ஆனால் அதன் வால் எவ்வித கெடுதியையும் விளைவிக்காது...
ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.
Click to download.
நிறையப்பேர் இத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.