அவனும் அவளும்.
எனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் தாம்பத்தியத்தில் எப்போதும் குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கும். கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும். மன அமைதிக்காக அவர் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவரின் வாழ்கையில் நிறைய மாற்றங்கள். அந்தப் புத்தகங்களின் மூலம் தான் வாழ்க்கையின் சாரத்தைப் புரிந்து கொண்டதாகவும் கணவன் மனைவிக்கிடையில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளைக் களைவதற்கு புரிந்துணர்வு ஒன்றே அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும் கூறினார்.
குடும்பம் என்பது ஓர் அழகிய தேன்கூடு. அதில் இருக்கும் தேனீக்களை அன்பால்தான் பிணைக்க முடியும். அந்த அன்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் வலியுறுத்துகின்றன என்றால் மிகையில்லை.
நன்றி ரமணி சந்திரன் - ஓர் ஆய்வு என் உலகம்.