நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.
அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.
.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......
.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....
.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....
படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..
Click to download.