தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும் சுதேசமித்திரன்
பொங்கலோ பொங்கல் ...
இனிய
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
திரைக்கதை இல்லாத சினிமா என்பது ஆணுறை அல்லது பெண்ணுறை இல்லாமல் பாலியல் தொழிலாளியிடம் போவதைப் போல துணிகரமானது.
உலகத்திலேயே அபத்தமானதொரு சினிமாவுக்குக்கூட திரைக்கதை என்பதாக ஒன்று இருந்துதான் தீரவேண்டும்.
ஆனால் இதையெல்லாம் கடந்து எடிட்டர் பார்த்து எதைச் செய்து தருகிறாரோ அதுவே சினிமா என்று கையைக்கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த வகையில் தமிழ் சினிமா உலக சாதனையோன்றையே படைத்துவிட்டது என்பதுதான் முதல் விசேஷம்.
......இந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே என்னும் திரைப்படம் 1970 ல் வெளிவந்த Robert Bolt எழுதி David Lean இயக்கிய Ryan's Daughter எனும் ஆங்கிலப் படத்தின் பாத்திரங்களைக் காப்பியடித்து வெளியாகிறது. அது காப்பி என்று ரயான்ஷ் டாட்டரை அறிந்திராதவர்கள் தெரிந்துகொள்ள இயலாத வகையில் திரையுலகினுக்குள் பெரும் புரட்சி என்று செய்து காட்டியது.....
....பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஏற்படுத்திய அலையில் ஆளாளுக்கு கிராமத்துக்குள் கேமராவைத் தூக்கிக்கொண்டுபோய் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பிக்க நேர்ந்த அவலம்தான் திரைக்கதை இல்லாத சினிமாவின் தொடக்க காலம்....
.......இன்றைக்கு உலகநாயகன் கமலஹாசன் சினிமாவை முன்னே கொண்டு செல்வேன் என்று குருதிப்புனல், தேவர்மகன், ஹே ராம், மகாநதி, அன்பே சிவம் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகராக இருந்தும் அவரால் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவது இனியும் சாத்தியமேயில்லை என்கிற நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது....
......சினிமாவும் அரசியலும் தொடர்ந்து ஊடும் பாவுமாகப் பின்னப்பட்டுக்கொண்டே வருகின்றன. திருநாவுக்கரசு, திருமாவளவன் போன்ற பிறவி அரசியல்வாதிகள் கூட சினிமாவில் தலைகாட்டினால்தான் ஆச்சு என்று ஏமாந்துபோகிற அளவுக்குப் போய்விட்டது......
.....எனது தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை இந்தக் கேள்வியை வகுப்பில் கேட்டார். சினிமாவில் எதனால் பாடல்கள் இடம் பெறுகின்றன? என்று. யாருக்கும் விடை தெரியவில்லை. அவரே சொன்னார். காதலர்கள் பழகுகிற காலம் நீண்டதாக இருக்கலாம். அதைச் சுருக்கித் தர ஒரு பாடல் போதும். இது ஒரு சூத்திரம்.....
இணைய வாசகர்களுக்காக சுதேசமித்திரன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை இது. வித்தியாசமாக இருந்தது என்று பதிவிட்டுவிட்டேன். ( தொகுத்த யாரோ ஒரு அன்பருக்கு நன்றி).
Click to download.
No comments:
Post a Comment