சதுரகிரி மலைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஊரில் பிறந்திருந்தாலும், சிறுவயதில் இரண்டு மூன்று முறை சென்றுவந்திருந்தாலும் அதனுடைய உண்மையான சிறப்புகளையும் அற்புதங்களையும் அறிந்ததில்லை.
சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சதுரகிரியின் சிறப்புகளை சொல்லும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதுமுதல் யார் சதுரகிரியின் சிறப்புகளை சொன்னாலும் எங்களுருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுவதில் ஒரு இனம் தெரியாத சந்தோசம்; இருந்தாலும் அதன் உண்மையான அற்புதங்களை உணர்ந்தவனில்லை என்ற குற்ற உணர்வு எனக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த மலையின் அடிவாரமாகிய தாணிப்பாறைக்கு சென்ற மாட்டுவண்டிப் பயணங்களும், அங்கிருக்கும் வழுக்குப்பாறையில் சருக்கிவிளையாடி கிழித்துக்கொண்ட டவுசர்களும்... ம்...ம்...
சதுரகிரியின் அற்புதங்களையும், போகத்தேவையான வழிகாட்டுதல்களையும் நண்பர் பிரபாகரன் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கிரார். இங்கு சென்று பாருங்கள்.
நீண்ட நாட்களுக்கு முன்பு kricons தனது வலைப்பூவில், சக்தி விகடனில் வந்த தொடரை தொகுத்து மென் புத்தகமாக கொடுத்திருந்தார். நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் சேமிக்கும் முயற்சியாக இதோ நமது வலைப்பூவிலும்.
தொகுத்த kricons அவர்களுக்கு மிக்க நன்றி.
Click to download.
Thank you for the book "Chaturagiri Yathirai"
ReplyDeleteவணக்கம், தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சதுரகிரி யாத்திரை பதிவிற்காக அன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகங்கள், உங்களிடம் தயவுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.நான் வெளிநாடு வாழ் தமிழன் ஆவேன். நன்றி
ReplyDeleteஇரா. இராஜேஸ்வரன்
///Dr.P.Kandaswamy said...
ReplyDeleteThank you for the book "Chaturagiri Yathirai"////
உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டாக்டர் சார். உங்களது பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
////Rajesh said...
ReplyDeleteவணக்கம், தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சதுரகிரி யாத்திரை பதிவிற்காக அன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகங்கள், உங்களிடம் தயவுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.நான் வெளிநாடு வாழ் தமிழன் ஆவேன். நன்றி
இரா. இராஜேஸ்வரன்////
அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகங்கள் கிடைத்தால் பதிவிட்டுவிடுகிறேன் ராஜேஷ்.
சதுரகிரி மின்புத்தகம் டவுன்லோடு செய்து படித்துப்பார்த்தேன். மிக விரிவாக, நன்றாக இருந்தது. இணைப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி
ReplyDelete