தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Apr 4, 2010

அறிவுமதி கவிதைகள் நட்புக்காலம்


















காதல் மட்டும் தான் கவிதையின் களமாக பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, வெகு அரிதாக நட்பும். இந்தக் கவிதைத் தொகுப்பில் உருக அவருக்கு ஒரு நட்பு கிடைத்திருக்கிறது.



கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்

பேசிக் கொண்டிருந்த நம்மை

நண்பர்களாகவே

உணரும் பாக்கியம்

எத்தனைக் கண்களுக்கு

வாய்த்திருக்கும்....



கனவில் கூட

என்னைக்

கிள்ளிப் பார்க்கும்

இந்தச் சுரப்பிகள்

உன்னைக்

கண்டதும் எப்படி

இவ்வளவு

இயல்பாய்

தூங்கிவிடுகின்றன.....



தேர்வு முடிந்த

கடைசி நாளில் நினைவேட்டில்

கையொப்பம் வாங்குகிற

எவருக்கும் தெரிவதில்லை

அது ஒரு நட்பு முறிவிற்கான

சம்மத உடன்படிக்கைஎன்று.....



தூங்கு என்று மனசு சொன்னதும்

உடம்பும் தூங்கிவிடுகிற

சுகம்

நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது...


இத்தகைய நட்பு சத்தியமா? அவரே சொல்கிறார்.....


காமத்தாலான

பிரபஞ்சத்தில்

நட்பைச்

சுவாசித்தல்

அவ்வளவு

எளிதன்று...



கொஞ்சம் குற்ற உணர்ச்சி வருகிறது.......

Click to download.

No comments:

Post a Comment



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts