ராஜம் கிருஷ்ணன்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பந்தா சற்றும் இல்லாதவர். பெண்கள், அடித்தட்டு மக்கள், தலித், என்று எல்லாவித முற்போக்கு இயக்கங்களுடனும், தன்னைத் தயங்காமல் இணைத்துக் கொள்வார்.
அவரது புதினங்கள் பாவப்பட்ட, சுரண்டப்படும், ஏமாற்றப்படும், மக்களின் நிலையினை, கவர்ச்சி முலாம் எதுவும் பூசாமல், மிகைப்படுத்தாமல் படம் பிடித்துக்காட்டும். மனசாட்சியுடையோர் நெகிழ்ந்துவிடுவர்.
உற்றதுணையாக இருந்த கணவர் இறந்த பிறகு, குழந்தை எதுவும் இல்லாத நிலையில்,சுற்றத்திடம் இருந்ததையெல்லாம் இழந்துவிட்டு, நிர்க்கதியாக இருக்கிறாராம் ராஜம் கிருஷ்ணன்.
நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவரை சந்திக்கப் போகலாம். யாராவது ‘பெரிய’ மனிதர் ஆதரவைப்பெறலாம். ராஜம் கிருஷ்ணன் எப்படி வாழ விரும்புகிறாரோ, அப்படியே அவர் வாழ்வதற்கு உதவ, நாம் முயற்சிக்கலாம்.
நாஞ்சில் நாடன்.
நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.
அய்க்கண்.
"ஆனந்த விகடன்' நடத்திய மாணவர் திட்டத்தின் கீழ் என்னுடைய "வள்ளியின் திருமணம்' என்கிற சிறுகதை முதன் முதலாக விகடனில் என் புகைப்படத்துடன் பிறந்தது. அந்தக் கதைக்கான சன்மானத்துடன் ஒரு அழகான பேனாவும் பரிசாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். அது ஒரு முக்கோணக் காதல் கதைதான் என்றாலும், "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்ற திருக்குறளை மையக் கருத்தாக வைத்து எழுதியிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை ஏதாவது ஒரு "கருத்து' அல்லது "செய்தி' இல்லாத கதையே நான் எழுதியதில்லை என்ற மனநிறைவு எனக்கு உண்டு.
click to download.
No comments:
Post a Comment