பரமார்த்த குரு கதைகள்
ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வெறும் நகைச் சுவைக்காக அல்லாமல், அக்காலத்தில் தமிழ்க் கலாசாரத்தின் வெளிப்பாடுகளான சமய நம்பிக்கைகள், சமூக நடைமுறைகள், ஆகியன குறித்த தமது பார்வையின் பதிவாக வீர மாமுனிவர் என்ற பாதிரியார் ஜோசப் பெஸ்கி உரைநடையில் எழுதியது பரமார்த்த குருவும் சீடர்களும்.
தாம் பணிசெய்ய நேரிடும் வட்டாரத்தில் வழங்கும் மொழியினை நன்கு கற்றுத் தேர்ந்தால்தான் தமது பணியினைச் சரிவர நிறைவேற்ற இயலும் என்பதால் தமிழை நன்கு பயின்ற பாதிரியார் பெஸ்கி, தம்மைப் போலவே வெளியிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து பணியாற்ற முற்படும் சக பாதிரிமார்கள் சுவாரசியமாகத் தமிழ் கற்க உதவும் தொண்டாகப் பரமார்த்த குரு கதையினை எழுதியிருக்கக் கூடும். அதுவே தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு ஒரு வரவாக அமைந்தது.
இனி கதை...
பரமார்த்த குரு ஒரு குருகுல ஆசிரியர்... மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர். பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது...
முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் மறுபடியும் நினைக்கவைக்கிறது.
Click to download.
No comments:
Post a Comment