ரத்தக் காட்டேரி பிராம் ஸ்டோக்கர்.
தமிழில் ஜெகாதா
உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நாடகங்களாகவும் கதைகளாகவும் சினிமாக்களாகவும் படைப்பாளியின் வசதிக்கேற்ப எத்தனையோ உருமாற்றத்தை இந்த டிராகுலா நாவல் உலகம் முழுவதும் அடைந்து விட்டது.
சவப் பெட்டியிலிருந்து டிராகுலாவை நாவலின் ஆசிரியர் பிராம் ஸ்டோக்கர் முடிவுக்குக் கொண்டு வந்தபோதும், வாசகனுக்கு ஏனோ இன்னும் அந்த ரத்தக் காட்டேரி ரத்தம் வழியும் உதடுகளுடன், ஜொலி ஜொலிக்கும் நெருப்புக் கண்களுடன், கூர்மையான வளைந்த கோரைப்பற்களுடன் மிகவும் அருகில் ரத்த தாகத்தோடு கவனித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு இருப்பதாக, இந்நாவலின் மொழிபெயர்க்கும் பணி நிறைவடையும் நேரத்தில் என்னாலும் நினைக்க முடிந்தது.
சூரிய உதய நேரம் "ரத்தக் காட்டேரி'க்குச் சுத்தமாக ஒவ்வாத நேரம். ஆயினும் "இனிய உதய'த்தில் பவனி வரும் ரத்தக் காட்டேரி வாசகரை உவகை கொள்ளச் செய்யும் என நம்புகிறேன். என்றும் அன்புடன்,-ஜெகாதா
Click to download.