தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
வீழ்வேன் என்று நினைத்தாயோ? - சி. மகேந்திரன்
உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது!
கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன்.
ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ?’ என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளி வந்த தொடர்.
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
கடவுள் இருக்கிறாரா? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா? இதற்கு 'பைனர...