தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label periyar. Show all posts
Showing posts with label periyar. Show all posts

Jan 21, 2010

ஆத்மா, மோட்சம்_நரகம்- பெரியார்












நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.

அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.

.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......

.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....

.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....

படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்..


Click to download.

Dec 14, 2008

இந்து மதமும் தமிழர்களும் தந்தை பெரியார்








திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும், இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ்கட்சி மாகாண மகாநாட்டில் "திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல " என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்செஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறோம்.
இது தந்தை பெரியார் அவர்களுடைய புரட்சிகரமான கருத்தாகும்.
Click to download.

Oct 27, 2008

'பெண் ஏன் அடிமையானாள் பெரியார்..














இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் மாறாமல் இருப்பது தான் வேதனை.

வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

Click to download.

Oct 9, 2008

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை
ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது....















எனக்கு,'ஏதாவது எழுதலாமா' என்ற உணர்ச்சி வந்தது.உடனே, 'என்ன எழுதலாம்?' என்று யோசித்தேன். காகிதம் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன். "ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்பதுபற்றி எழுதத் தோன்றிற்று.

"ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?" என்று எழுதுகின்ற நான்,' நான்,ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?' என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சருத்துரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.



Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts