
படிக்கும் காலங்களில் என்னைப் பாதித்த எழுத்தாளர் சுஜாதா. அவரது என் இனிய இயந்திராவைப் படித்துவிட்டு மீண்டும் ஜீனோவிர்ககாக அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். அவருடைய ஜிட்டு (சரியா?) சிறுகதையை வாசித்துவிட்டு அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு மூன்றுநாட்கள் ஆகியது. இன்று நினைத்தாலும் மனதை என்னவோ செய்யும் சிறுகதை அது.
பிரிவோம் சந்திப்போம் பாகம் 1 ஐ ஒரே நாளில் படித்துவிட்டு பாகம் 2 க்காக அலைந்து திரிந்து ஒரு முடிவுசெய்தேன் இனிமேல் பரிட்சை காலங்களில் சுஜாதாவின் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று( அது புதுவருட சத்தியம் போல ஆனது வேறு கதை). பிறகு ஒரு நேரத்தில் பிரிவோம் சந்திப்போமின் இரண்டாம் பாகம் படித்து வெளிநாட்டில் வேலைக்கே போகக்கூடாது என்று முடிவுசெய்தேன் (இப்போது வெளிநாட்டில் தான் வேலை செய்கிறேன்!!).
ஏன் எதற்கு எப்படி புத்தகம் ஒரு சொத்தாக என்னிடம் இருக்கிறது. வேறு எதையோ இணையத்தில் தேடியபோது மென்புத்தகமாக கிடைத்தது பதிவிட்டுவிட்டேன். என்னதான் இருந்தாலும் அந்த புத்தகத்தில் படிக்கும் திருப்தி மென்புத்தகமாக படிப்பதில் எனக்குக் கிடைக்கவில்லை.
Click to download.






















