தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label Jothidam. Show all posts
Showing posts with label Jothidam. Show all posts

Oct 2, 2009

'எண் ஜோதிடம்'















ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9
A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z

இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள். 1 - ஞாயிறு, 2 - கேது, 3 - குரு, 4 - இராகு, 5 - புதன், 6 - சுக்கிரன் (வெள்ளி ) 7 - சந்திரன், 8 - சனி, 9 - செவ்வாய்.

எண் சோதிடர்கள் பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations)எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் எண் சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்!

எண்களை வைத்துக் கொண்டு ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், வாணிகம் எப்போது தொடங்க வேண்டும், என்பதை எல்லாம் கணித்துச் சொல்கிறார்கள்

உலகத்தில் இன்று வாழும் மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால் ஒரே எண்ணில் உள்ள மக்களது விதி ஒரேமாதிரி இருக்க முடியுமா?

"புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பிய திரு அவர்களுக்கு நன்றி"

Click to download.

May 11, 2009

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்














புத்தகத்தில் ஜோதிடரத்னம் கிரகங்களுக்கும் மனித உயிர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருவகையில் எல்லா ஜோதிடர்களும் அதையே தங்களுக்கு ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்து சில வகையான சந்தேகங்கள் முழுமையாய் விளக்கப்படாமல் என்னுள் உள்ளது.

மனநிலை சரியில்லதவர்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஏன்?

அமாவாசை பௌர்ணமி நேரங்களை கணத்த நாட்கள் என்றும் அந்த நாட்களில் பெரிசுகள் "போகும்" வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் சொல்வார்கள். ஏன்?.

தேன் எடுக்கப்போகும் போது அமாவாசை பவுர்ணமி பார்த்து எடுக்கவேண்டும் என்றும் சொல்வார்கள். ஏன்?.

இது எல்லாம் சந்திரன் நம்மீது, நமது செயல்பாடுகள் மீது influence செய்கின்றது என்று கொள்ளலாமா?

அப்படிஎன்றல் ஜோதிடம் உண்மையானது தானா????..

என்வரையில் ஜோதிடம் முழுமையாய் உண்மையென்றால் அதிலிருப்பவை ( அதாவது ஜோதிடக் கட்டங்கள் சொல்பவை ) நடந்தே தீரும், நம்மால் மாற்றமுடியாது. எனவே கவலைப்படத்தேவை இல்லை.

ஜோதிடம் முழுமையாய் பொய் என்றால், அதற்கும் கவலைப்படத்தேவை இல்லை.

சரியா?

இனி புத்தகம் பற்றி..

இதில் 'ஜோதிடரத்னம்' S.சந்திரசேகரன் அவர்கள் குறைந்த அளவு கல்வி அறிவு உள்ளவர்களும் வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்கவேண்டும் என்று எளிதாக விளக்கியுள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டி.


Click to download.

Apr 8, 2009

வாஸ்து சாஸ்திரம்










வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.

"வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.

வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை. ---கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்நூலில் சாதரண மக்கள் தெரிந்துகொள்ள போதுமானவற்றை தொகுத்துள்ளார் Dr.J. Perumal M.B.A, Ph.D.

Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts