தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.
இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
1. முயன்றவரை மரம் நடுங்கள்.
2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.
3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.
நன்றி
ஸ்ரீ
இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
ஆரம்ப விண்ணியல்

சந்திரன் 27 நாள் 7 மணித்தியாலத்தில் ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது. இதன் பாதையும் நீள்வளைய வடிவமாக இருப்பதால் பூமியிலிருந்து இதன் தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியில் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் சந்திரன் இருக்கும் கோணங்களையும் அந்த இரண்டு இடங்களின் இடைத் தூரத்தையும் அறிந்தால் இவற்றிலிருந்து சந்திரனின் தூரத்தை மிகவும் இலகுவாக கணிக்கலாம்.....
பூமியிலிருந்து ஒரு கல்லை 11.2 கி.மீ. (7 மைல்) வேகத்துடன் ஒரு கல்லை எறிய முடியுமானால் அக்கல்லானது அப்படியே மேல்நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கும், பூமிக்குத் திரும்பி வராது. இந்த வேகத்தைத் தப்பும் வேகம் velocity of escape என்பர். சந்திரனில் தப்பும் வேகம் 2.4 கி.மி. ஆகும்....
கிரகங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது சனியாகும். இதன் சார்படர்த்தி 0.7. நீரிலும் பாரம் குறைந்தது. ஒரு பிரமாண்டமான சமுத்திரத்தில் இதனை வைத்தால் இது மிதக்கும்....
1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஹாலியின் வால்வேள்ளியின் வலுக்கூடாகப் பூமி சென்றது. அப்போது அதன் வால் ஏறக்குறைய 3.2 கோடி கி. மி. நீளம் இருந்தது. வால்வெள்ளியின் தலை பூமியுடன் மோதினால் ஆபத்து ஏற்படலாம், ஆனால் அதன் வால் எவ்வித கெடுதியையும் விளைவிக்காது...
ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.
Click to download.
நிறையப்பேர் இத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.
சூரியனின் கதை

நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.

Clik to download.
அண்டத்தின் அற்புதங்கள்3

ஏகவியல் என்பது அறிவியல் பெருமக்கள் எதிர்காலத்தில் அடையத்துடிக்கும் முடிவான உண்மை. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
17 ம் நூற்றாண்டில் நியுட்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். உலகில் நிகழும் இயக்கம், விண்மீன்கள் இவற்றின் இயக்கம் அனைத்தும் ஒரே விதிக்குள் உட்பட்டு நிகழ்கிறது என்று கூறியுள்ளார் நியூட்டன்.
மிக அழகான படங்களுடன் படிப்பதற்கு தூண்டுவதாக உள்ளது.

Click to download .
அண்டத்தின் அற்புதங்கள்

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி.
...................
பிரபஞ்சத்தை வியாபித்திருப்பவை நட்சத்திரங்கள். மனிதனைப் போலவே பிறந்து, வள்ர்ந்து மடிந்தும் போகின்றன. அவற்றுக்கும் வாழ்க்கை உண்டு. எனவே தான் முன்னோர்கள் அதிக தவம் செய்தவர்கள் நட்சத்திரங்களாக மாறி விட்டதாக கற்பனை செய்தார்கள்.
1. பிரபஞ்சத்தின் வயதை 14.3 பில்லியன் ஆண்டுகள் என்று சரியாக எவ்வாறு கணக்கிட முடிந்தது?
2. இந்த பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (Cம்ப்) என்பதெல்லாம் இருக்கட்டும். ஈர்ப்பு விசை ஏற்வட்டால் சுருங்கத்தானே செய்ய வேண்டும். ஏன் விரிவடைந்து கொண்டே செல்கிறது பிரபஞ்சம்?
3. பிரபஞ்சம் விரிவடைகின்றது என்றால் அது விரிவடையக்கூடிய இடம் ஏற்கனவே இருக்கிறதா? அப்படி இருந்தால் அது என்ன?4. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போனால் இதன் முடிவு தான் என்ன?

Click to download .
அண்டத்தின் அற்புதங்கள்

அண்டத்தின் அற்புதங்களை அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக எடுத்துரைக்கும் இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. இது முதல் பகுதி.

Right click and "Save target as" to your desired location.
நீங்க என்ன சொல்லப்போறீங்க..
Popular Posts
-
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...
-
ஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகிகள் எராளம்...
-
கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...
-
வந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 194...
-
நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரி...
-
ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...
-
ரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!. திருமணங்கள் தோல்வியில் ம...
-
மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...
-
கடல் கடந்து கரையேறலாம்! ஏற்றுமதிக்கு ஒரு என்சைக்ளோபீடியா. சென்னையைச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர் மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில் இட்லி சாப்...
-
அன்புடைய நண்பர்களுக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்கள...