தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search
Showing posts with label selected stories. Show all posts
Showing posts with label selected stories. Show all posts

Mar 1, 2009

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்






ராஜம் கிருஷ்ணன்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பந்தா சற்றும் இல்லாதவர். பெண்கள், அடித்தட்டு மக்கள், தலித், என்று எல்லாவித முற்போக்கு இயக்கங்களுடனும், தன்னைத் தயங்காமல் இணைத்துக் கொள்வார்.

அவரது புதினங்கள் பாவப்பட்ட, சுரண்டப்படும், ஏமாற்றப்படும், மக்களின் நிலையினை, கவர்ச்சி முலாம் எதுவும் பூசாமல், மிகைப்படுத்தாமல் படம் பிடித்துக்காட்டும். மனசாட்சியுடையோர் நெகிழ்ந்துவிடுவர்.

உற்றதுணையாக இருந்த கணவர் இறந்த பிறகு, குழந்தை எதுவும் இல்லாத நிலையில்,சுற்றத்திடம் இருந்ததையெல்லாம் இழந்துவிட்டு, நிர்க்கதியாக இருக்கிறாராம் ராஜம் கிருஷ்ணன்.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவரை சந்திக்கப் போகலாம். யாராவது ‘பெரிய’ மனிதர் ஆதரவைப்பெறலாம். ராஜம் கிருஷ்ணன் எப்படி வாழ விரும்புகிறாரோ, அப்படியே அவர் வாழ்வதற்கு உதவ, நாம் முயற்சிக்கலாம்.

நாஞ்சில் நாடன்.

நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.

அய்க்கண்.

"ஆனந்த விகடன்' நடத்திய மாணவர் திட்டத்தின் கீழ் என்னுடைய "வள்ளியின் திருமணம்' என்கிற சிறுகதை முதன் முதலாக விகடனில் என் புகைப்படத்துடன் பிறந்தது. அந்தக் கதைக்கான சன்மானத்துடன் ஒரு அழகான பேனாவும் பரிசாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். அது ஒரு முக்கோணக் காதல் கதைதான் என்றாலும், "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்ற திருக்குறளை மையக் கருத்தாக வைத்து எழுதியிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை ஏதாவது ஒரு "கருத்து' அல்லது "செய்தி' இல்லாத கதையே நான் எழுதியதில்லை என்ற மனநிறைவு எனக்கு உண்டு.

click to download.

Dec 14, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்













வண்ணதாசன்.

வண்ணதாசன் புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

அசோகமித்திரன்

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து.

ஜி. நாகராஜன்

பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.

கி. ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.


Click to download.



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts