மந்திரச்சொல் எஸ். கே. முருகன்
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மந்திரச் சாவி இருக்கிறது, அதனைக் கண்டுபிடித்து சரியாகப் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றிப் படிக்கட்டில் ஏறுகிறார்கள்.
நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு.
ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, ‘நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்!’ என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார்.
இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்கேளாடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ். கே. முருகன்.
இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திருப்தி ஏற்படுவது இந்தப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு.‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடையே மந்திரச்சொல்லானது இந்த மந்திரச்சொல்.

Click to download.