நீங்கள் ஓர் ஒரு நிமிடச் சாதனையாளர்.
லேனா தமிழ்வாணன்.
நம்மில் பலருக்கு ஒரு நிமிடம் என்றால் ஒரு நிமிடம்தானே? இதெல்லாம் ஒரு பெரிய நேரமா என்று மனத்திற்குள் எண்ணம் இருக்கிறது.
ஒரு நிமிடத்திற்குள் உலகில் எத்துணை எத்துணை விஷயங்களோ நடந்து முடிந்துவிடுகின்றன. பல அரிய விஷயங்கள் நிகழ்த்தப்பட்டு விடுகின்றன.
மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான்.
உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவேத இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.
நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தைன.
இந்த நிமிடேம இப்போதே என்று நாமும் இந்த விதியைப் பின்பற்றினால் சாதனையூருக்கு ஒரு புறவழிச் சாலை கிடைத்த மாதிரிதான்!.

Click to download.