உங்களுடைய 35 நாவல்கள் படித்திருக்கிறேன். எத்தனை அற்புதமானது. உங்களுடைய பெயரை எங்கு எந்தப் புத்தகத்தில் பார்த்தாலும் சந்தோசம். உங்கள் புத்தகத்தைப் படித்தாலும், படித்ததை மீண்டும் படிக்க ஆவல்.
Click to download.
This blog try to bring available Tamil e-books in one place.
வண்ணதாசன்.
வண்ணதாசன் புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அசோகமித்திரன்
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து.
ஜி. நாகராஜன்
பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.
கி. ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
Click to download.
எனது சிந்தை மயங்குதடி ரமணிசந்திரன்
இந்த ஒளி நீதான் என்று தெரிகிறது எனக்கு வேண்டியது நீதான் என்பதும் புரிந்துவிட்டது ஆனால் ஏனோ பக்கத்தில் வராமல் அவ்வளவு தூரத்திலேயே நின்றாய்! மதி மதி என்று கதறிப் பார்த்தேன் என்குரல் உன் காதுகளை எட்டவே இல்லை.
click to download
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அளவு எல்லாம் இட்டுச் செல்கின்றது.
வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக சிந்திக்க வைப்பதாக ஆட்கொல்லுவதாக சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதேவிதமான பதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
இங்கே கிளிக்கவும்.
வாழ்க்கையில் சில மகத்தான விஷயங்கள் நம்முடைய பெரும் முயற்சி இல்லாமலேயே நமக்குக் கிடைத்து விடுகின்றன அப்படி எங்களுக்குக் கிடைத்த ஒரு ஆனந்த வரம்தான் சத்குரு ஜக்கி வாசுதேவின் அறிமுகம்.
அவருடைய யோகா வகுப்புகளில் எங்களுக்குக் கிடைத்த அற்புத அனுபவம், எங்களுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது. இறுக்கமாக மூடியிருந்த பல மனக் கதவுகளைத் திறந்துவிட்டது. நட்பும் நம்பிக்கையும் தழைத்தோங்கின. ஆனந்தமும் அமைதியும் நண்பர்களாயின. இந்த பூமியில் நாம் சும்மா வசிக்க வரவில்லை, வாழ வந்திருக்கிறோம் என்பதை சத்குருவின் வார்த்தைகள் எங்களுக்கு அழுத்தமாக உணர்த்தின.
தடைகளை வென்று, நீங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்கான எளிய வழிமுறைகளை சத்குரு உங்களுக்காவே வழங்கிடயுள்ளார். அள்ளிக் கொள்ளுங்கள். -சுபா
இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் மாறாமல் இருப்பது தான் வேதனை.
வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.
நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்
Click to download.
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!