அயல் சினிமா எஸ். ராமகிருஷ்ணன்

உலக சினிமாவை அலசும் இவரை அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும்.
எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர்.
சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர்.
உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.

No comments:
Post a Comment