தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

May 4, 2009

சே குவேரா தமிழில்
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே









க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு... சே பதிலளித்தார், "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை. நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. 1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை. இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா.

எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.
-நன்றி சாளரம்.....

Click to download.

13 comments:

  1. உங்கள் வலைப்பூவிற்கு என் வலைப்பூவில் இருந்து தொடுப்பு கொடுத்து உள்ளேன். உங்கள் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளன. எனக்கு கடல் புறா நாவல் தேவை. கிடைக்குமா?

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திலீபன். என்னிடம் சாண்டில்யனின் வேறு ஒரு நாவல் உள்ளது. கூடிய விரைவில் அதனைப் பதிவிடுகிறேன்.

    நன்றி,
    ஸ்ரீ

    ReplyDelete
  3. Anonymous18/8/09

    I too late to visit this site. Thank you very much.

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  5. மிக்க நன்றீ தங்கலுடைய ஸேவை தொடர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //anbou said...
    மிக்க நன்றீ தங்கலுடைய ஸேவை தொடர எனது வாழ்த்துக்கள்///
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பு. (உங்கள் பெயர் எப்படி இருந்தாலும் அன்பு என்பதே நன்றாகத்தானே இருக்கிறது).

    ReplyDelete
  7. சிறந்த தளம் என்று கூறலாம்.......

    ReplyDelete
  8. ////shanjith said...
    சிறந்த தளம் என்று கூறலாம்....... ///

    வருகைக்கு நன்றி shanjith

    ReplyDelete
  9. வீரம் சவாதும் இல்லை சரணடிவதும் இல்லை .....

    வீரனை பூத்தகமகா திந்ததிகு நன்றி

    ReplyDelete
  10. Anonymous21/8/14

    கலீல் ஜிப்ரான் "மணலும் நுரையும்" புத்தகம் தேவை கிடைக்குமா...?

    ReplyDelete
  11. Anonymous22/10/22

    ean download agalai enakku?

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts