தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Jul 21, 2010

பதிவிட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஆயிற்று. 130 புத்தகங்கள், 175000 பக்கங்கள் மற்றும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருகைகள். இவையெல்லாம் விட 200 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள்.


இருந்தாலும் சிலமாதங்களாக புதிய புத்தகங்களை பதிவிட முடியவில்லை. காரணம் பெரியவேலை எல்லாம் இல்லை. ஒரு அயற்சி அல்லது ஒரு சோம்பேறித்தனம் அல்லது வேறு எதோ ஒன்று.

இடையில் ஒரு அனானியின் பின்னுட்டம்

Anonymous said...

ALready tamil writers are struggling for Minuscule monetary benefits.ippadi pozhapuzha mann alli poduringale?


இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை.


எனவே சிறிது நாட்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கி இருந்துவிட்டு மறுபடியும் வருகிறேன். முடிந்தால் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

24 comments:

  1. Thank u friend. i got a very good books from ur blog. keep it up.

    ReplyDelete
  2. பேர் சொல்லாமல் எழுதியிருக்கும் யாரோவுக்காகவெல்லாம் மதிப்பு கொடுத்து தொடராமல் இருக்கவேண்டியதில்லை.நீங்கள் தொடருங்கள்.தமிழுடன் தொடர்பு கடினமாயிருக்கும் எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு உதவியாயிருக்கிறது என எங்களுக்குத்தான் தெரியும்.நீங்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  3. Anonymous21/7/10

    My dear valuable friend

    I am sad that you are hurted by anonymous people comments. They do not know the value adding to people like us (NRI'S) if the books are available in the stores where we live defenitely will go and buy. At least thro' your blogspot I was able read excellent collections.

    Once again my dear friend, my humble request please continue your valuable inputs.

    Many thanks in advance

    K.Sundaramurthy, Yemen

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே,
      கண்ணதாசனின் வனவாசம் புத்தகம் இருந்தால் தயவு செய்து எனக்கு மின் அஞ்சல் செய்யவும். என்னுடைய மின் அஞ்சல் முகவரி raj2k23@yahoo.com. நன்றி.

      Delete
  4. Hi Sri,

    Dont value the words of anonymous. U r doing a great job. Please continue.

    Anyway, thank you for ur valuable works.

    I am expecting ur return.

    Best Regards,
    Lavanya

    ReplyDelete
  5. Anonymous22/7/10

    u doing wonderful job.
    please continue....

    ReplyDelete
  6. நண்பரே,உங்கள் பதிவின் மூலம் பயன் பெற்ற பலரில் நானும் ஒருத்தன்.இவ்வாறு நீங்கள் சொர்வுறுவது என்னைப்போன்ற பலரைப் பாதிக்கும்.
    ஒன்றைக் கவனத்தில் கொள்க;புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களும் ,pdf ஆக கணணியைப் பார்த்துப் படிப்பவர்களும் இரு வேறு துருவங்கள்.
    அந்த நபரின் கருத்துப் படி நூலகத்தில் புத்தகம் இருப்பதும் நூலாசிரியருக்கு நஷ்டம் தானே.
    உங்கள் மூலமாக நூலாசிரியரின் ஆக்கங்கள் பல மட்டத்தை வந்தடைகின்றது.நீங்கள் இந்தச் சேவையை இலவசமாகத்தானே செய்கிறீர்கள்.

    வருத்தம் வேண்டாம்.

    விரைவில் உங்கள் அடுத்த மென் புத்தகத்தை எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  7. இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்பது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

    படித்துப் பிடித்த புத்தகத்தைத் தேடிப் பிடித்தாவது வாங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.

    இணையத்தில் படிப்பவர்களில் பலர் காசு இல்லாமையால் அச்சுப் புத்தகத்தை வாங்காமலே இருக்கக் கூடியவர்கள்.

    ReplyDelete
  8. Best sellers of all time வரிசையில் இடம்பெறும் The Alchemist-ஐ எழுதிய Paulo Coelho தன்னுடைய புத்தகங்கள் ebook-களாக பகிரப்படுவதை வரவேற்கவும் ஊக்குவிக்கவும் செய்கிறார். இதனால் தன் எழுத்துக்கள் பற்றிய அறிமுக பல மட்டங்களையும் சென்றடைந்து புத்தகங்களின் விற்பனை அதிகரிப்பதாகச் சொல்கிறார்.

    இப்படி பலரது பார்வையும் பல்வேறுபட்டு இருக்கிறது. வெளியீட்டாளரிடம் அல்லது அந்த எழுத்தாளரிடம் இருந்து மாற்றுக் கருத்து வந்தால் வேண்டுமானால் பரிசீலிக்கலாம். இப்படி யாரோ ஒரு அனானி சொன்னதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

    யார் கண்டது இங்கே பகிர்ந்துகொள்ளப்படும் புத்தகங்களின் ஆசிரியர்களில் சிலரும் Paulo Coelho போன்றவர்களாக இருக்கலாம். எழுத்தாளரின் உள்ளார்ந்த நோக்கம் தன் எழுத்து பலரையும் சென்றடைவது தானே! உங்கள் சேவையை தொடருங்கள்.

    ReplyDelete
  9. பல எழுத்தாளர்களின் திறமையை உங்கள் வலைப்பூவின் மூலம்தான் இதுவரை தெரிந்து வந்தோம்.அவர் கூறியது போல் நினைத்தால் நூலகங்களே எழுத்தாளர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுத்தும்.தொடரட்டும் உங்கள் நற்பணி.

    ReplyDelete
  10. i accepting Mr.Malgudi and Mr.Maa.sivakumar Mr.Deva comments
    its true
    Please continue.......



    Really we r very proud as your blogger followers
    thanks and Regards,
    N Krishnan

    ReplyDelete
  11. Please ignore him.

    This blog is wonderful collections of books. No doubt at all.

    I have recommended many people for books.

    Don't stop your service.

    ReplyDelete
  12. நான் அனானியின் கருத்தை ஒத்துப்போகிறேன். வெளிநாட்டில் புத்தகம் கிடைப்பதில்லை போன்றவை எல்லாம் பம்மாத்து.. ஏன் இவர்கள் இந்தியாவுக்கு வருவதே இல்லையா என்ன? மேலும் சில பதிப்பகங்கள் இப்பொழுது புத்தகங்களை வெளிநாட்டிற்கு கூட அனுப்புகிறார்கள்..It is an copy right offense to share books with out the permission.

    தமிழனின் இலவச மோகத்திற்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும் ஒன்றை எவனும் காசு குடுத்து மறுபடி வாங்கி படிக்க மாட்டான் அதுவும் முக்கியமாக தமிழன்.

    இவ்வுளவு கதை பேசுகிறார்களே எங்கே அவர்களை தாங்கள் தரவிறக்கிய ஒவ்வொரு புத்தகத்துக்கும் 50ரூபாய் அனுப்புங்கள் நான் legal ஆகவே உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிப்பாருங்க ஒரு பய தரவிறக்கம் செய்ய மாட்டான் ஏன் இந்த பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டான்.

    நீங்க நல்லெண்ணத்தில் இதை செய்தாலும் தவறு அல்லவா?

    ReplyDelete
  13. //இணையத்தில் இலவசமாக படிப்பதால் புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்பது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. //
    அந்த புத்தகத்தின் விற்பனையில் ஒன்று குறைந்தால் கூட பாதிப்பே..அதன் வலி அதை எழுதியவனுக்கும் பதிப்பாளனுக்குமே தெரியும்.


    //படித்துப் பிடித்த புத்தகத்தைத் தேடிப் பிடித்தாவது வாங்குபவர்கள் நிறைய பேர் உண்டு. //
    இப்படி வாங்குபவர்களை விட வாங்காமல் போறவங்க எண்ணிக்கை மிக அதிகம்.


    //இணையத்தில் படிப்பவர்களில் பலர் காசு இல்லாமையால் அச்சுப் புத்தகத்தை வாங்காமலே இருக்கக் கூடியவர்கள். //

    மாசி அண்ணே தமிழ் புத்தகங்களின் விலை என்ன கோடிக்கண்க்கிலா விற்கிறது பெரும்பான்மையான புத்தகங்கள் நூறு ரூபாய்க்குள் அடக்கம். இணையத்துல உலவுகிறவனுக்கு இந்த அளவு கூட வசதி இல்லையென்பதை கண்டிப்பா ஒத்துக்கொள்ள முடியாது...

    ReplyDelete
  14. அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.கண்ணதாசனின் வனவாசம் pdf தேடிக் கொண்டிருக்கிறேன்.நண்பர்களிடம் இருந்தால் தர முடியுமா

    ReplyDelete
  15. --மாசி அண்ணே தமிழ் புத்தகங்களின் விலை என்ன கோடிக்கண்க்கிலா விற்கிறது பெரும்பான்மையான புத்தகங்கள் நூறு ரூபாய்க்குள் அடக்கம். இணையத்துல உலவுகிறவனுக்கு இந்த அளவு கூட வசதி இல்லையென்பதை கண்டிப்பா ஒத்துக்கொள்ள முடியாது//

    எத்தனை புத்தகங்களை வாங்க முடியும் நண்பா.நடுத்தர வர்க்கத்தில் சாத்தியமில்லை என்பது உங்களுக்கு புரியவில்லை. இங்கு பிரபலங்களின் புத்தகங்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. அவர்களுக்கு பணம் என்பது ஒரு பொருட்டல்ல,.

    ReplyDelete
  16. வாசிக்கும் பழக்கமே இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என பலரும் வேதனை கொள்கின்றார்கள். அந்த வேதனையை சில இலவசங்கள் தீர்க்கின்றன என்று நினைத்து நான் இந்த சேவையை வரவேற்கிறேன்.

    நூலகங்களில் படிக்கும் மக்களுக்கு அவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இது இணைய நூலகம் அவ்வளவுதான். அதிகார வர்க்கம் சட்ட உரிமை மீறல் எனலாம். ஆனால் அதை பொருட்செய்ய முடியாது.

    ReplyDelete
  17. Anonymous16/2/13

    ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள் அது காப்புரிமை நீக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்படுவதே நல்ல சமூகத்திற்கு அழகு ..

    ReplyDelete
  18. Anonymous16/2/13

    ஒரு புத்தகம் வெளிவந்து பத்துஆண்டுகளுக்குள், அது காப்புரிமை நீக்கப்பட்டு, பொதுமைப்படுத்தப்படுவதே, நல்ல சமூகத்திற்கு அழகு ..
    by.பிரபா

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. My mail id brvmc85@gmail.com pls send udaintha nilakkal.i searched many place no chance to get

    ReplyDelete
  21. Anonymous21/8/14

    My Email address is jseeker2@gmail.com. Can you send me pdf copy of "கண்ணதாசனின் 'வனவாசம்'?

    ReplyDelete



முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts