தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Sep 17, 2018

இலவச மின்னூல் தரவிறக்கம்

அன்புடைய நண்பர்களுக்கு,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.











எனது இந்த இலவச புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் இல்லாமல் இருப்பதை நண்பர்கள் அறிவார்கள். இங்குள்ள இணைப்புக்களும் (links) வேலை செய்யவில்லை.

சில காரணங்களுக்காகவே புதிய பதிவுகளும் இடவில்லை மேலும் இணைப்புகளை சரிசெய்யவும் இல்லை. 

இணையதளம் பரவலாக அறியப்பட்ட போது இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களை PDF பக்கங்களாக இங்கு மக்களுக்கு தருவதற்காக இந்த தளம் தொடங்கப்பட்டு அதிகமான புத்தகங்கள் எங்களால் முடிந்த அளவு கொடுத்தோம். சில நேரங்களில் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அந்த குறிப்பிட்ட பதிவை நீக்கியதும் உண்டு.  எனினும் ஒரு குற்றவுணர்வு இருந்துகொண்டே இருந்தது. 

சமுகத்தில் எழுத்தாளர்களின் பங்கு என்பது மிக அரிதானதும், முக்கியமானதும் என்று நினைக்கிறோம். அவர்களின் எளிய வாழ்க்கை நிலையையும் கருத்தில் கொண்டோமென்றால் இப்படி அவர்களின் புத்தகங்களை எடுத்து இணையத்தில் இலவசமாக கொடுப்பது முற்றிலும் தவறானது என்று உணர்ந்துகொண்டதால் பதிவிடுவதை நிறுத்திக்கொண்டோம்.

சமீபத்தில் திரு ஜெயமோகன் அவர்களின் இந்த பதிவை பார்க்க கிடைத்தது. அவரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

https://www.jeyamohan.in/112357#.W599NlQzbcs

முன்பே இத்தகைய காரணங்களால் பதிவிடுவதை நிருத்திவைத் திருந்தாலும் இன்று முழுவதும் உணர்ந்து, சில காலங்களில் இந்த இணையதளத்தையே முழுவதும் நீக்கிவிடலாம் என்று எண்ணியிருக்கிறோம். 

இதனால் மக்களுக்கு பெரிய பாதிப்பிருக்காது என்ற எண்ணத்தோடு, அவ்வாறு பாதிப்பிருந்தாலும் அதற்கான முழுமையான வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு உங்களிடமிருந்து விடை கொள்கிறோம்.

என்னோடு பல புத்தகங்கள் சேர்ந்து பதிவிட்ட Sri அவர்களின் முழுமையான உடன்பாடுடன் இத்த முடிவு எடுக்கப்பட்டது.

திரு, ஜெகதீசன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் மிக்க நன்றிகளும் வணக்கங்களும்.

மிக்க நன்றி.

உங்களின் கருத்துக்களை பின்னுட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வணக்கங்களுடன்,
சி. பழனிவேல்.



Mar 4, 2016

Cheei_html_35d89efa

ச்சீய் பக்கங்கள் 2012 – 2013 ஆண்டுகளில் குங்குமம் வார இதழில் தொடராக வந்தது. மொத்தம் 25 அத்தியாயங்கள். அது போக பதிப்பக வேண்டுகோளுக்கு இணங்கி நூலாக்கத்துக்கென கலவி பற்றி ஓர் அத்தியாயம் எழுதிச் சேர்த்தேன்.
 ஆக மொத்தம் 26 அத்தியாயங்கள். ஆனால் அதில் 22 அத்தியாயங்கள் மட்டுமே 2014ல் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்த வெட்கம் விட்டுப் பேசலாம் புத்தகத்தில் இடம் பெற்றது. மீதமிருக்கும் 4 அத்தியாயங்களையும் நூலுக்கு எழுதிய முன்னுரையையும் தொகுத்து, புத்தகத்துக்கு முன்பு தீர்மானித்திருந்த ச்சீய்… என்ற பெயரில் இப்போது (2015) இலவச‌ மின்னூலாக வெளியிடுகிறேன்.


ி.சரவணகார்த்திககயன் (1984) அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பபாறியியல் படித்து, தற்பபாது பபங்களூரில் தனியார் நிறுவனப ான்றில் ப ன்பபாருளாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஊர் பகாலவ – ஈபராடு. 2007ல் குங்கு ம் இதழில் கவிப் கபரரசு லவரமுத்து இவரது ஒருத்தி நிலனக்லகயிபை… என்ற பலைப்பிலன முத்திலரக் கவிலதயாகத் பதர்ந்பதடுத்தார். இவரது முதல் புத்தக ான சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) 2009ம் ஆண்டின் த ிழக அரசின் சிறந்த நூல் விருது பபற்றது. பரத்லத கூற்று (அகநாழிலக), பதவலத புராணம் (கற்பகம் புத்தகாையம்) என்ற கவிலதத் பதாகுதிகள் எழுதியிருக்கிறார். 



Jan 22, 2016

உனக்காகவே ஒரு ரகசியம் சத்குரு ஜக்கி வாசுதேவ்

























அழுக்கு உடைகளுடன் நின்ற என்னைப் பார்த்து, நிர்மலானந்தா புன்னகைத்தார். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, குனிந்து என் பாதங்களைத் தொட்டார்.

அதுவரை கோயில்களில்கூட குனிந்து வணங்க மறுத்தவன் நான். விறைப்பாகவும் உறுதியாகவுமே இருந்து பழகியிருந்தேன். என் பாதங்களை அவர் தொட்டதும் எனக்குள் இறுக்கமாக இருந்த எதுவோ உடைந்தது, கரைந்தது.

அதன்பின் அவரைப் பார்க்கப் பல முறை சென்றதுண்டு. அப்போது எனக்குள் எந்த ஒரு ஆன்மிகத் தேடலும் இல்லை. ஆனாலும் எங்களுக்குள் பேச்சே இல்லாமல் மெல்ல ஓர் உறவு பூத்தது.

உனக்காகவே ஒரு ரகசியம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்.




Oct 2, 2015

வீழ்வேன் என்று நினைத்தாயோ? -  சி. மகேந்திரன்





உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது!

கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது!

கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன்.

 ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ?’ என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளி வந்த தொடர்.

Dec 12, 2014

என்.சொக்கனின் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு மின்னூல் தரவிரக்கம்

இசைப் புயல் என்று அறியப்படும் இசையின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றினை சிறப்புற எடுத்துரைக்கும் நூல் இது. ஆசிரியரான என்.சொக்கன் பல் மொழி வல்லுனர். விகடன், முன்னோர் போன்ற பதிப்பகங்களில் இவர் நூல்கள் வந்துள்ளன. இந்நூலை படிக்கவும், பகிரவும் உரிமை வழங்கியுள்ளார் ஆசிரியர். எனவே இந்நூலை படித்து தங்களுடைய நண்பர்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கவும், பகிரவும் முடியும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்று நூலை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Jul 21, 2014

சி. ஜெயபாரதனின் - சீதாயணம் மின்னூல் தரவிரக்கம்


இராமனை கதையின் நாயகனாக வைத்து எழுதப்பட்ட இராமாயணம், இதிகாசங்களுள் ஒன்றாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இராமயணத்தினை முன்வைத்து எழுதப்படுகின்ற நூல்கள் ஏராளம். அவற்றில் சில இராமாயணத்தில் சொல்லப்பட்டவைகளில் சில மாற்றங்கள் செய்து சுவாரசியம் கூட்டி எழுதப்படுகின்றன.

அவ்வாறு இராமாயனத்தின் நாயகியான சீதையை முன் வைத்து சி. ஜெயபாரதன் எழுதியுள்ள நாடகமே இந்நூல். இதில் இராமன் முதல் அனைவருமே மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். சீதா படுகின்ற துன்பத்தினை பிரதானமாக வைத்தே இந்நூல் செல்கிறது என்பதால் புதுவிதக் கோணம் நமக்கு கிடைக்கும்.

ஆசிரியர் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் சில விசயங்கள் இந்துகளை வருத்தவும் செய்யலாம். ஆனால் இராமாயணம் குறித்தான மாற்றுப் பார்வை வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும்.

சீதாயணம் மின்னூலை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

நன்றி.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்

Feb 25, 2014

சித்த மருத்துவ புதையல்



ஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும்.

நன்றி.

Kuruparan Paramanantham.

Dec 13, 2013

M.S. உதயமூர்த்தியின் எண்ணங்கள்



வணக்கம்.

MS உதயமூர்த்தியின் எண்ணங்கள்  பல பதிப்புகள் வெளியான ஒரு சிறந்த புத்தகம். இத்துடன் இதை பிடிஎஃப் வடிவத்தில் இணைத்திருக்கிறேன். தங்கள் தளத்தில் பதிவேற்றி பலரும் படிக்கச் செய்யுங்கள்.

நன்றி

விஷ்வ பாரதி


MS உதயமூர்த்தியின் எண்ணங்கள்


Oct 3, 2012

நந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்

கல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெரும் சர்ச்சைகளையும், யூகங்களையும் உள்ளடக்கியதாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. அதன் முடிவில் ஏகப்பட்ட வினாக்களை மக்கள் முன் வைத்துவிட்டு ஓய்ந்துவிடுகிறது. தனக்கு பின்னால் வரும் எழுத்தாளர்கள் இவ்வாறான கதைகளை எழுதுவார்கள் என்று கல்கியே குறிப்பிட்டுள்ளார்.

அப்படி பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களைக் கொண்டே எழுதப்பட்ட நாவல் நந்திபுரத்து நாயகி. பொன்னியின் செல்வனை முடித்தவர்கள், அதன் தொடர்ச்சியான விக்கிரமனின் நாவலை தவறாமல் வாசியுங்கள்.

விக்கிரமனின் நந்தி புரத்து நாவலை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

நன்றி.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Sep 8, 2012

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்


கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,. சிலரினை அலறி அடித்துக் கொண்டு ஓட வைத்துவிடும். காரணம் அதன் பெரிய தோற்றம். முதன்முதலாக பொன்னியின் செல்வனை கண்டபோது அதன் ஐந்து தொகுதிகளின் அளவினைக் கண்டு பயந்து ஓடியிருக்கிறேன். இருந்தும் என் அன்னை பொன்னியின் செல்வனின் சிறு சிறு கதாபாத்திரங்களை வரை சொல்லும் போது, ஆசையை அடக்கமுடியாமல் வியந்திருக்கிறேன்.

கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும், ஏனோ பொன்னியின் செல்வன் மட்டும் இன்னும் பலரை சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி அதன் கனம் சிலரை வருந்தம் கொள்ள வைக்கின்றதோ அதே போல அச்சு புத்தகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் புத்தகமும் பலரை துன்பபட வைக்கிறது. 250 ரூபாய்க்கு சிறியவடிவில் கிடைத்தாலும், ஏதோ மூன்றாம் தர செக்ஸ்புத்தகம் போன்று அது இருப்பதால் பலரும் விரும்புவதில்லை. சற்று தரமாக அழகிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் 2500 க்கும் மேல்தான் கிடைக்கின்றன என்பதை புத்தக சந்தையில் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இப்போது எந்த பிரட்சனையும் இல்லை. பொன்னியின் செல்வன் ஒலிபுத்தக வடிவில் இலவசமாக கிடைத்தது. கல்கியின் காவியத்தினை காதால் கேட்டு மனத்தில் நிரப்பிக் கொள்ளும் சந்தர்ப்பம் நம் முன்னோர்களுக்கு வாய்க்கவில்லை, நமக்கு வாய்த்திருக்கிறது. இனிய புத்தகத்தினை இனிய குரலில் கேட்ட நானும் ஆவலாக உள்ளேன்.

01. பொன்னியின் செல்வன்-பாகம் ஒன்று-புதுவெள்ளம்

02. பொன்னியின் செல்வன்-பாகம் இரண்டு-சுழல் காற்று

03. பொன்னியின் செல்வன்-பாகம் மூன்று- கொலை வாள்

04. பொன்னியின் செல்வன்-பாகம் நான்கு- மணிமகுடம்

05. பொன்னியின் செல்வன்-பாகம் ஐந்து- தியாக சிகரம்


பதிவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

மார்ச் 13ம் தேதி இணைத்தது -

நண்பர் விஜயன் அவர்களின் மின்னஞ்சல் மூலம் இந்த இணைப்புகளிலிருந்து ஒலி புத்தகம் நீக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். இணையத்தில் பதிவேற்றும் பெயர்தெரியாத நபர்களின் இணைப்புகளே இங்கே பகிரப்பட்டு வந்ததன. சிரமம் பாராமல் தரவிரக்கி வைத்துக் கொள்வதுதவிற நமக்கு வேறுவழியில்லை. மீண்டும் இணையத்தில் ஏற்றும் போது சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மிக எளிமையாக தரவிரக்கம் செய்யும் முறை இப்போதைக்கு சாத்தியமின்றி போய்விட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்.

http://www.itsdiff.com/kalkips இணைப்பின் கீழ் இதே ஒலிப்புத்தகம் கிடைக்கின்றது. ஆனால் மொத்த தொகுப்பாக தரவிரக்க இயலாது. மீண்டும் இணைப்பு சாத்தியமாகும் வரை இதனை பயன்படுத்திக் கொள்ள நண்பர்களை வேண்டுகிறேன்.


அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

மேலும் -
பொன்னியின் செல்வன் - திறனாய்வு

Sep 4, 2012

தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல்

குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடுதல் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பல நேரங்களில் பெயர்களை தேடி அலையும் நிலை வந்துவிடுகிறது. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைக்கும் காலம் மலையேறிவிட்டது. நவீனம் இப்போது அவசியமாகிவிட்டாலும், இன்னும் தாய் மொழி பற்று தவறிவிடவில்லை.

என் உறவினர் ஒருவரின் பெயர் இமையன். நெடுங்காலமாக அந்த பெயர் சொல்லி தான் அழைப்போம். பிறகு ஒருநாளில் தெரிந்தது அது இமயவரம்ப நெடுசேரலாதன் எனும் பெரும்பெயரின் சுருக்கம் என்று. வியப்புதான். இத்தனை பெரும் பெயரை கொண்டு அவர் இயங்குவது. இது போல பெரும் நீளமான பெயர்களை இப்போது மக்கள் விரும்புவதில்லை. பாஸ்போட் போன்ற விண்ணப்ப படிவங்களில் அதிகபட்சம் 13 எழுத்துகளே பெயருக்காக தரப்படுகின்றன. அயல்நாடுகளில் இருக்கும் பெயருக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இவைகளுக்கு ஏனோ நாமும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அழகாகவும், சிறியதாகவும், கருத்தாளம் மிக்கதாகவும் வைக்க விரும்புகின்றவர்களுக்காக நிறைய புத்தகங்கள் வருகின்றன. பலவற்றில் சிறப்பான பெயர்கள் எதுவும் இருப்பதில்லை என்ற போதும், எளிய விலையில் கிடைக்கின்ற என்பதற்காக நாம் வாங்குகிறோம். அந்தக் கவலை இந்த புத்தகத்தில் இல்லை.  ஆண்களுக்கான பெயர்கள், பெண்களுக்கான பெயர்கள் என தனித்தனியாக உள்ளன.

அத்துடன் வாகணங்களுக்கு தமிழக அரசு விதிப்படி தமிழிலிலேயே எண்களை எழுதலாம் போன்றவைகளும்,. வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்வைக்க ஆலோசனையும் சொல்லப்பட்டுள்ளது.

 தமிழில் பெயரிடுவோம் - மா.தமிழ்ப்பரிதி மென்நூல் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.




ஆசிரியரை தொடர்பு கொள்ள -

மா.தமிழ்ப்பரிதி
9382854321
tparithi@gmail.com

நன்றி,.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Sep 3, 2012

கி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்

மதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர்.

தமிழனுக்கு எப்படி சரியான வரலாறு இல்லையோ,. அது போல உலக வரலாறுகளும் தமிழில் இல்லை. போர்களையும், மன்னர்களையும் சுற்றி திரியும் பாடபுத்தகங்கள் வரலாற்றை மிகவும் கசக்க செய்கின்றன. உண்மையில் வரலாறு தேனை விட இனிமையானது. நம் மனித இனம் என்றில்லை உலகம் தோன்றியது முதல் ஒவ்வொன்றையும் அழகாக விவரிக்கின்றது கிமு கிபி நூல்.

ஒலிப்புத்தகம் எழுத்தினை விட அதிக வலிமைவாய்ந்து திகழ்கின்றது. ஏ.சால்ஸ் அவர்களின் ஒலி ஏதோ இதற்காகவே படைக்கப்பட்டது போல அருமையாக இருக்கிறது. மெல்லிய வருடும் இசை அவ்வப்போது வந்து பலம் சேர்க்கிறது. இந்திய வரலாறு மிகவும் பிந்திய நிலையில்தான் வருகிறது என்றாலும் தொடக்கம் பாபிலோனியா நாகரீகத்தில் தொடங்கி இறுதியில் நம்மை வந்தடைவது சிறப்பான திட்டமிடுதலை உணர்த்துகிறது.

யூதம் கிறிஸ்துவமான வரலாறு, கிறிஸ்துவம் இஸ்லாமியமாக மாறிய வரலாறுகளை ஏற்கனவே அறிந்திருந்தால் உங்களுக்கு ஆதம் ஏவால் கதை தோன்றிய கதையும் தெரிந்திருக்கும். பாபிலோனியாவின் சிந்தனாவாதிகளின் கற்பனை சித்தாந்தமே இன்று உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த மூன்று மதங்களின் முன்னோடி. ஏனோ இந்து மதம் சற்று விலகி போய் நிற்க காரணம் எதுவென கி.மு கி.பி எனக்கு தெளிவுபடுத்தியது.

வருடங்களை பெரியதாக கொள்ளாமல் மதன் வரலாற்றை விவரிக்கும் போது, நிகழ்வுகளை விட காலம் பெரியதல்லை என்று தோன்றுகிறது. மிகவும் அரிதாகவே காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதுவே புத்தகத்திற்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது எனலாம்.

நிறைய சொன்னால் புத்தகத்தின் கேட்கும் போது உள்ள சுவாரசியம் குன்றிவிடும். அதனால் தரவிரக்கம் செய்யுங்கள் ரசித்து கேளுங்கள்.

கி.மு கி.பி - மதன் ஒலிபுத்தகம் பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

தொடர்பு கொள்ள -

பல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.

Jan 4, 2011

சாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.



நாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அரிது. எனினும் சில தலை சிறந்த நாவல்கள் இப்போது கிடைக்கின்றன. அதில் யவனராணியை இங்கு கொடுத்திருக்கிறேன்.

படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/


யவனராணி-பாகம் ஒன்று

யவனராணி-பாகம் ஒன்று-பகுதி1
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி2
யவனராணி-பாகம் ஒன்று-பகுதி3

யவனராணி-பாகம் இரண்டு
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-1
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-2
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-3
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-4
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-5
யவனராணி-பாகம் இரண்டு-பகுதி-6

Dec 31, 2010

சம்போ சிவ சம்போ!-சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்


அன்பு நண்பர்களே!,

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சம்போ சிவ சம்போ மென்நூலை இங்கு சொடுக்கி பதிவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 22, 2010

ஆயிஷா குறுநாவல் தரவிரக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

என்னுடைய சகோதரன் வலைப்பூவில் ஆயிஷா புத்தகத்தினைப் பற்றி சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அத்துடன் ஆயிஷா நாவலுக்கான சுட்டியினையும் இணைத்திருந்தேன். அனைவரும் படித்துவிட்டு பாராட்டினர்.

இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன்.



ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் புத்தகத்தினை தன்னுடைய இணையப் பக்கத்தில் இலவசமாகவே இணைத்திருக்கிறார்.

தமிழில் ஆயிஷா நாவலை படிக்க,..

ஆங்கிலத்தில் ஆயிஷா நாவலை படிக்க,..

நன்றி.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

Dec 5, 2010

சகோதரன் ஜெகதீஸ்வரனின் வணக்கங்கள்

இந்த மாபெரும் வலைப்பூவின் வளர்ச்சியில் நானும் பங்காற்ற வாய்ப்பு கொடுத்த நண்பர் ஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய பல்லாயிரம் நன்றிகள்.


இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைப்பதிவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் நான். என்னுடைய வலைப்பூ சகோதரன். தங்களுடைய எண்ணங்களை, கோபங்களை முன் வைக்கும் வலைப்பதிவுகளில் அரிதாக சில மட்டும் வாசகர்களுக்காக எழுதப்படுபவை. அந்த சில வலைப்பூக்களில் ஸ்ரீயின் இந்த வலைப்பூவும் ஒன்று என்பதில் பெரும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பு அனுபவத்திற்காக தேடித்திரியும் வாசகர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு பொக்கிசம். சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வழங்கும் ஒரு வலைப்பூ அழியாச்சுடர்கள் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பதிப்புரிமை என்பதையெல்லாம் தாண்டி வாசகர்களுக்கு நல்ல படைப்புகள் சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இங்கு அழியாச்சுடர்களை அறிமுகம் செய்ய காரணம். அதன் நோக்கமும் ஸ்ரீயின் நோக்கமும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டவே.

மிக விரைவில் இத்தளத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்.

இங்கு வருபவர்களுக்கு இது ஒரு இணைய நூலகம் என்பது தெரியும். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தினை அறிமுகம் செய்யுங்கள். தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் நூல்களும், மிக அரிய படைப்புகளும் இங்கே மேலும் இணையப் போகின்றன.

வலைப்பதிவை தொடரும் 265 நண்பர்களுக்கும், நண்பர் ஸ்ரீக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.

sagotharan.wordpress.com

Jul 21, 2010

பதிவிட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஆயிற்று. 130 புத்தகங்கள், 175000 பக்கங்கள் மற்றும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருகைகள். இவையெல்லாம் விட 200 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள்.


இருந்தாலும் சிலமாதங்களாக புதிய புத்தகங்களை பதிவிட முடியவில்லை. காரணம் பெரியவேலை எல்லாம் இல்லை. ஒரு அயற்சி அல்லது ஒரு சோம்பேறித்தனம் அல்லது வேறு எதோ ஒன்று.

இடையில் ஒரு அனானியின் பின்னுட்டம்

Anonymous said...

ALready tamil writers are struggling for Minuscule monetary benefits.ippadi pozhapuzha mann alli poduringale?


இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை.


எனவே சிறிது நாட்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கி இருந்துவிட்டு மறுபடியும் வருகிறேன். முடிந்தால் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Jun 22, 2010

ஷோபாசக்தியின் படைப்புகள்


















ஷோபாசக்தி ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். இப்பொழுது புலம்பெயர்ந்துள்ளார். சமகாலத் தமிழ் அரசியல் புனைகதையாளர்களில் ஒருவராவார்.

ஷோபாசக்தி பற்றி விஜய் மகேந்திரன்

...... பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று.

ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.


அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம்.

ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.

பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

நன்றி- விஜய் மகேந்திரன்


ஷோபாசக்தி-யின் ‘ம்’



Click to download.



ஷோபாசக்தி-யின் ‘கொரில்லா’


Click to download.



ஷோபாசக்தி-யின் ‘கறுப்பு’


Click to download.



ஷோபாசக்தி-யின் ‘சனதருமபோதினி’


Click to download.

May 22, 2010

கற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர்.


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று

வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு

உருண்டயும் உருளுதடி

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது

சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்

வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்

வார்த்தையில் உள்ளதடி.

Click to download.



சுவாமி விவேகானந்தரின் மணிமொழிகள்

எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.























நமது நிலைக்கு நாமே காரணம்!.

நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம்!.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூடஇடம் கிடைக்காது.


தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.


இதுவரை பதிவிட்ட மென்புத்தகங்களில் எனக்கு மனதில் திருப்தியும் நிறைவும் தந்த பதிவு இதுதான். மனம் நிம்மதி இல்லாமல் மிகுந்த சலனத்துடன் இருக்கும்போது படித்துப்பாருங்கள், சத்தியமாய் வேறோர் நிலைக்கு இந்த புத்தகம் நம்மை எடுத்துச்செல்லும்.




Click to download.



தமிழிஷில் ஓட்டிட்டு அதிகப்படியானோர் நம்மைப்போல் பயனுற வழிசெய்யுங்கள்.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts